சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பவானி அருகே சிறுமியை திருமணம் செய்த இரண்டு கணவருக்கு போக்சோ

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள காடப்பநல்லூர் பகுதியை சேர்ந்தவர், அப்புசாமி, 48: இவர் இதே பகுதியில் செங்கல் சூளை கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, நாகமணி, 34: இவர்களுக்கு 18 வயது முழுமையடையாத மகளுக்கு, சேலம் மாவட்டம், காவேரிபுரம், புதுப்பட்டியை சேர்ந்த, காமராஜ், 34: என்பவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியை கட்டாயம் திருமணம் செய்து

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள காடப்பநல்லூர் பகுதியை சேர்ந்தவர், அப்புசாமி, 48: இவர் இதே பகுதியில் செங்கல் சூளை கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, நாகமணி, 34: இவர்களுக்கு 18 வயது முழுமையடையாத மகளுக்கு, சேலம் மாவட்டம், காவேரிபுரம், புதுப்பட்டியை சேர்ந்த, காமராஜ், 34: என்பவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியை கட்டாயம் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
பின்னர் புதுமண தம்பதிகளாக இருவரும் தலை ஆடியை கொண்டாடுவதற்காக காடப்பநல்லூர் வருவதற்காக பவானி பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த சிறுமியை, பள்ளி பருவத்தில் காதல் செய்த, சேலம் மாவட்டம், காவிரிபட்டியை சேர்ந்த அஜித்,21: என்பவர் மாணவியை கடத்தி சென்று சங்ககிரி அருகே விநாயகர் கோவிலில் வைத்து குழந்தை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் உதவியுடன் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின்பேரில் பவானி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவிக்கு விருப்பம் இல்லாமல் கட்டாயம் திருமணம் செய்ததும், மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்ததும், இதற்கு இரண்டு மணமகன் வீட்டாரின் பெற்றோர் உடந்தையாக இருந்ததால் பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் திருமணம் செய்த இரண்டு மணமகன்களை போக்சோ சட்டத்தின் கீழ் மாணவியின் பெற்றோர் நாகமணி,அப்புசாமி,கட்டாய திருமணம் செய்த காமராஜர் பெற்றோர் குப்புசாமி, கோவிந்தம்மாள் ஆகிய நான்கு பேரையும் குழந்தைகள் திருமணம் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X