அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதிப்பெண் மறு கணக்கீடுக்கு வாய்ப்பு தனி தேர்வர்களுக்கு அக்டோபரில் தேர்வு

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: ''பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டில் மாறுபாடு இருப்பது தெரிந்தால், அவர்களுக்கு மறு கணக்கீடு செய்ய வாய்ப்பளிக்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்து உள்ளார்.பிளஸ் 2 மதிப்பெண் விபரங்களை வெளியிட்ட பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: சி.பி.எஸ்.இ., பாட திட்டத்துக்கு முன், தமிழக பாட திட்டத்தில், பிளஸ் 2 மதிப்பெண் விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. அரசு
மதிப்பெண் மறு கணக்கீடு,வாய்ப்பு, தனி தேர்வர்களுக்கு அக்டோபரில் தேர்வு

சென்னை: ''பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டில் மாறுபாடு இருப்பது தெரிந்தால், அவர்களுக்கு மறு கணக்கீடு செய்ய வாய்ப்பளிக்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்து உள்ளார்.

பிளஸ் 2 மதிப்பெண் விபரங்களை வெளியிட்ட பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:
சி.பி.எஸ்.இ., பாட திட்டத்துக்கு முன், தமிழக பாட திட்டத்தில், பிளஸ் 2 மதிப்பெண் விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. அரசு அமைத்த கமிட்டியின் பரிந்துரைப்படி, மதிப்பெண் நிர்ணய முறை தேர்வு செய்யப்பட்டது. இந்த மதிப்பெண்ணில் மாறுபாடு இருப்பதாக தெரிந்தால், அதை மறு கணக்கீடு செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த மதிப்பீட்டு முறையில் தங்களுக்கு திருப்தி இல்லை என கருதும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வும் நடத்தப்படும். பள்ளிகளில் படிக்காத தனித்தேர்வர்கள், 39 ஆயிரம் பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.அவர்களுக்கும், பிளஸ் 1 வகுப்புக்கு வராமல், பிளஸ் 2வில் தேர்ச்சி பெற முடியாதவர்களுக்கும், செப்டம்பர் அல்லது அக்டோபரில் பொதுத்தேர்வு நடத்தப்படும்.கொரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப, இந்த தேர்வு தேதி முடிவு செய்யப்படும்.பிளஸ் 2 பொதுத்தேர்வில், 600க்கு, 600 பெற்ற மாணவர்கள் இல்லை. அதேபோல், அரசின் கொள்கை முடிவுப்படி, முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பிடிக்கும் டாப்பர் மாணவர்களும் தேர்வு செய்யப்படவில்லை.


22ல் தற்காலிக சான்றிதழ்




பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ள மாணவ - மாணவியருக்கு, நாளை மறுநாள் முதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பளிக்கப்படும். அரசு தேர்வு துறையின், www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் காலை, 11:00 மணி முதல், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு மகேஷ் கூறினார்.


மெட்ரிக் மாணவர்களுக்கு 'ஜாக்பாட்'



தற்போது பிளஸ் 2 படிக்கும் தனியார் பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பில் அரசு பள்ளி மாணவர்களை விட அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். அதற்கேற்ப, அரசின் தற்போதைய மதிப்பெண் மதிப்பீட்டு முறையில், 50 சதவீதம், 10ம் வகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, 10ம் வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற, மெட்ரிக் உள்ளிட்ட தனியார் பள்ளி மாணவர்கள், பிளஸ் 2விலும், அரசு பள்ளி மாணவர்களை விட அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். எனவே, இன்ஜினியரிங் உள்ளிட்ட உயர்கல்வி சேர்க்கையில், தரவரிசை பட்டியலில் மெட்ரிக் மாணவர்கள் முன்னிலை பெறும் சூழல்
உருவாகியுள்ளது.


டி.சி., வாங்கியோரும் 'பாஸ்?'



பிளஸ் ௨ மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் விபரத்தில் அக மதிப்பீட்டு எண் எழுத்து தேர்வு மதிப்பெண் மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண் ஆகியவை தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் பிளஸ் 1ல் அரியர் வைத்திருந்த மாணவர்களும் பிளஸ் 2வில் தேர்ச்சி செய்யப்பட்டு உள்ளனர்.

ஆனால் பிளஸ் 1 வகுப்புக்கே வராமல் மாற்றுச் சான்றிதழ் வாங்கிவிட்டு படிப்பையே நிறுத்திய பலரும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேலுார் மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளில் இதுபோன்ற மாணவர்கள் தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு தேர்வு துறையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உரிய முறையில் விசாரிக்க வேண்டும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் மாற்றுச் சான்றிதழ் வாங்கியவர்களின் பட்டியலை பள்ளிகளில் சேகரித்து தேர்ச்சி பட்டியலையும் சரிபார்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


'அரியர்' மாணவர்களும் தேர்ச்சி



பிளஸ் 2 முடித்த மாணவர்களில், 33 ஆயிரத்து, 557 பேர், பிளஸ் 1ல் சில பாடங்களில் அரியர் வைத்தவர்கள். அவர்கள் மீண்டும் கடந்த கல்வி ஆண்டில், அரியர் தேர்வை எழுதியிருக்க வேண்டும். ஆனால், கொரோனா தொற்று பரவலால் தேர்வு நடத்தப்படவில்லை.
பிளஸ் 1 அரியர் மாணவர்களும், பிளஸ் 2வில் தேர்ச்சி பெறுவார்களா; 'ஆல் பாஸ்' செய்யப்படுவார்களா என, அரசு முடிவெடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் கடந்த மாதம் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, அரியர் மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவர் என, அமைச்சர் மகேஷ் அறிவித்திருந்தார். அதன்படி, அரியர் மாணவர்களும் தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


1,626 பேர் பெயில்



இதற்கிடையில், ஆல் பாஸ் மதிப்பீட்டு முறையிலும், 1,626 பேர் தேர்ச்சி பட்டியலில் இடம் பெறவில்லை. இவர்கள், 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 சேர்க்கை பெற்றிருந்தாலும், வகுப்புக்கு முறையாக வராமலும், பிளஸ் 1 பொதுத் தேர்வில் ஒரு பாடத்தில் கூட பங்கேற்காமலும் இருந்துள்ளனர்.
அவர்கள் இடைநிற்றல் மாணவர்களாக கருதப்பட்டு, தேர்ச்சி மதிப்பெண் வழங்காமல், பெயில் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற வேண்டுமென்றால், அரியர் தேர்வுகளை வரும் அக்டோபரில் எழுத வேண்டும் என, அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜூலை-202100:13:44 IST Report Abuse
Saravanan சிபிஎஸ்சி படிக்கும் மாணவர்கள் தமிழர்கள் இல்லையா, மாநில அரசு தேர்வு முடிவு அறிவிப்பினால் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் எந்த விதத்தில் ரேங்க் பட்டியல் அறிவிப்பார்கள், மெட்ரிக் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே கவுன்சிலிங் செல்ல முடியும் என்ற நிலை உருவாக்க போகிறது இதுதான் விடியல் அரசின் திட்டம்
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
20-ஜூலை-202123:03:28 IST Report Abuse
Mohan அப்படி இல்லை. அடுத்த தேர்தல் வாக்குறுதியே வீட்டுக்கு ஒருவரை டாக்டராக்கிடுவோம் என இப்படித்தான் இருக்கும்.
Rate this:
Cancel
N Krishnamurthy - SRIKAKULAM,இந்தியா
20-ஜூலை-202122:15:21 IST Report Abuse
N Krishnamurthy தகுதி இருக்கிறவன் அந்த இருக்கையில் உட்காரணும், ஆனால் இங்கே என்ன நடக்குது....... அந்த இருக்கையில் உட்கார்தவன் எல்லாம் எனக்கு தகுதி இருக்கிறது என்று நினைப்பதுதான் இது வேதனையான விஷயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X