சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் எம்.எல்.ஏ.,வின் முகநூல் பதிவில் பணம் கேட்டு தகவல்;அதிர்ச்சிக்குள்ளான முன்னாள் எம்.எல்.ஏ., போலீசில் புகார்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர், மாதேஸ்வரன், 52. அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வான இவர், தற்போது, அ.ம.மு.க., மாவட்ட பொருளாளராக உள்ளார். 2021ல், நடந்த சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.இன்று, அவரது முகநுால் பக்கத்தில் இருந்து, தொடர்பில் உள்ள நண்பர்களுக்கு அவசர தேவைக்கு பணம் வேண்டும்; பணம் அனுப்பும்படி,
 முன்னாள் எம்.எல்.ஏ.,வின் முகநூல் பதிவில் பணம் கேட்டு தகவல்;அதிர்ச்சிக்குள்ளான முன்னாள் எம்.எல்.ஏ., போலீசில் புகார்

ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர், மாதேஸ்வரன், 52. அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வான இவர், தற்போது, அ.ம.மு.க., மாவட்ட பொருளாளராக உள்ளார். 2021ல், நடந்த சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இன்று, அவரது முகநுால் பக்கத்தில் இருந்து, தொடர்பில் உள்ள நண்பர்களுக்கு அவசர தேவைக்கு பணம் வேண்டும்; பணம் அனுப்பும்படி, 'கூகுள்' மூலம் பணம் அனுப்பி வைக்கும்படி '7084570725' என்ற மொபைல் நெம்பர் குறிப்பிடப்பட்டிருந்தது.இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ., மாதேஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, அதிர்ச்சிக்குள்ளான அவர், 'நான், யாருக்கும் இதுபோன்ற தகவல் அனுப்பவில்லை; பணமும் கேட்கவில்லை' என்று கூறியுள்ளார். பின், தனது முகநுால் பக்கத்தில் பணம் கேட்டு வந்த தகவலுடன், 'இதுபோன்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம்; மெசேஜ் வந்தாலும் பணம் செலுத்த வேண்டாம்' என குறிப்பிட்டு பதிவு போட்டுள்ளார்.இதுதொடர்பாக, ஆத்துார் போலீசில் புகார் அளித்ததுடன், ஆன்லைன் மூலம் சைபர் கிரைமில், நாளை புகார் அளிக்க உள்ளதாக, முன்னாள் எம்.எல்.ஏ., மாதேஸ்வரன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X