அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., தயார்: இ.பி.எஸ்.,

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
ஓமலுார்:''உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., தயாராக உள்ளது,'' என, அ,தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., கூறினார்.சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று, முன்கள பணியாளர்கள் 100 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கிய பின், அவர் அளித்த பேட்டி:'நீட்' தேர்வு விவகாரத்தில் மக்களை தி.மு.க., ஏமாற்றி விட்டது. எங்கள் ஆட்சியில், கொரோனா தடுப்பூசி
உள்ளாட்சி தேர்தல், அ.தி.மு.க., தயார் ,இ.பி.எஸ்.,

ஓமலுார்:''உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., தயாராக உள்ளது,'' என, அ,தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., கூறினார்.சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று, முன்கள பணியாளர்கள் 100 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கிய பின், அவர் அளித்த பேட்டி:
'நீட்' தேர்வு விவகாரத்தில் மக்களை தி.மு.க., ஏமாற்றி விட்டது. எங்கள் ஆட்சியில், கொரோனா தடுப்பூசி வீணாக்கப்படவில்லை. ஆரம்ப காலத்தில் மக்களிடையே விழிப்புணர்வு குறைவாக இருந்தது.
அப்போது, எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்து அச்ச உணர்வை ஏற்படுத்தினர். குப்பியில் மீதமிருந்த மருந்து மட்டும் வீணானது. மூன்றாம் அலையை தவிர்க்க தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசி வழங்கக்கோரி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க., தயாராக உள்ளது.
சசிகலா இருந்த காலகட்டத்திலும், அ.தி.மு.க., தேர்தலில் தோல்விகளை சந்தித்துள்ளது. எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை வழங்கியதாக கூறி, எத்தனை பொய் தகவல்களை பரப்பினாலும், அ.தி.மு.க.,வை வீழ்த்த அவரால் முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
20-ஜூலை-202114:22:59 IST Report Abuse
vpurushothaman சசி எவ்வளவு " பிசி"யானாலும் எங்களை ஒண்ணும் செய்ய முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் "ஒரு கை" பார்தது விடுவோம்.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
20-ஜூலை-202113:32:24 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     ஆட்சியே போச்சு அப்புறம், முடிஞ்ச திருமணம் நீ மேளம் கொட்டி என பயன் , பாவம் உனக்கு நேரம் சரி இல்லை, மகனுக்காக தமிழ்நாட்டையே காட்டி கொடுத்தவன் இல்லையா, 2019 இல் நீ போட்டியே ஒரு AMENDEMNET வெளி மாநில மாணவர்கள் கூட TNPSC இல் விண்ணப்பிக்கலாம் என்று AMITH SHA சொன்னான் என்று செய்த அதன் பலன் TANGEDCO வில் 350 AE அதில் நம் தமிழர்கள் 9 பேர் , மிச்சம் குருமா சர்மா விகாஸ் படேல் என்று உள்ளனர் இந்த ஒன்று போதும் தமிழ்நாடு மாணவர்கள் சாபம் உன்னை விடாது துரத்தும்
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
20-ஜூலை-202113:16:35 IST Report Abuse
Dhurvesh விட்டுக்கொடுக்க வேண்டும்: இதை தான் சொல்லுகிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X