பொது செய்தி

தமிழ்நாடு

வெளிப்படை தன்மையின்றி நடக்குது மாற்றம்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
சென்னை : நெடுஞ்சாலை துறையில் வெளிப்படை தன்மையின்றி, பொறியாளர்கள் பணியிடமாற்றம் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெடுஞ்சாலை துறையில், 300க்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள், உதவி கோட்ட பொறியாளர்கள் உள்ளனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில், தலைமை பொறியாளர்கள் மட்டத்தில் பணியிடமாற்றம் நடந்தது. இதுதொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டது.புகார்தற்போது, உதவி

சென்னை : நெடுஞ்சாலை துறையில் வெளிப்படை தன்மையின்றி, பொறியாளர்கள் பணியிடமாற்றம் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நெடுஞ்சாலை துறையில், 300க்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள், உதவி கோட்ட பொறியாளர்கள் உள்ளனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில், தலைமை பொறியாளர்கள் மட்டத்தில் பணியிடமாற்றம் நடந்தது. இதுதொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டது.புகார்தற்போது, உதவி பொறியாளர்கள், உதவி கோட்ட பொறியாளர்கள் பணியிடமாற்றம் வெளிப்படை தன்மையின்றி நடந்து வருவதாக, புகார் எழுந்துள்ளது.இது குறித்து, துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது:கருணாநிதி ஆட்சியில் வழங்கிய பணி சுழற்சி உத்தரவை, நெடுஞ்சாலை துறை புதிய முதன்மை இயக்குனர் குமார் காற்றில் பறக்கவிட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் வழங்கும் போது, பத்திரிகைகள், ஊடகங்களில் வெளியிடப்படுகிறது.நெடுஞ்சாலை துறையில் வெளிப்படை தன்மையை கொண்டு வருவதற்காக, சமீபத்தில் முதல்வர், 'லேப்டாப்'கள் வழங்கினார். இதை பெற்று, பொறியாளர் களுக்கு புதிய இயக்குனர் வழங்கி உள்ளார். ஆனால், அவர் வழங்கும் பணி மாறுதல் உத்தரவுகள் அனைத்தும், வெளிப்படை தன்மையற்று இருக்கின்றன.உதவி பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் என அனைவருக்கும், தனித்தனியாக பணிமாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒருவருக்கு வழங்கிய உத்தரவு, மற்றொருவருக்கு தெரியாது.சுகாதாரத் துறையில், அனைத்து மருத்துவர்களுக்கும், சமீபத்தில் வழங்கப்பட்ட பணியிடமாறுதல், வெளிப்படை தன்மையுடன், கலந்தாய்வு முறையில் நடந்தது. இதனால், மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.பணியிட மாறுதல்ஆனால், நெடுஞ்சாலை துறையில் நடந்துள்ள பணியிட மாறுதல், முறையாக வேலை செய்து வருபவர்களுக்கு, விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இடத்தில், ஒரு ஆண்டு கூட பணி முடிக்காதவர்களை மாற்றிவிட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வலிமையானவர்கள், கேட்கிற இடத்தை பெறுவதும், வலியமையற்ற ஒடுக்கப்பட்டவர்கள், போடுகிற இடத்தில் பணி செய்யும் சூழலும் உருவாகி உள்ளது. ஒடுக்கப்பட்டவர்களின் நியாயமான குரல், முதல்வரின் காதில் விழுமா என்று, ஏங்கி உள்ளனர்.நாங்கள் முறையாகவே பணியிடமாறுதல் செய்தோம் என்று, முதன்மை இயக்குனர் கூறினால், அந்த உத்தரவுகளை வெளிப்படையாக அறிவிக்க, அவர் முன்வருவாரா என்பதே கேள்வி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை!சென்னையில் கோட்ட பொறியாளராக ரவி, ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இவர், பாபுஜி சந்திரசேரகன் என்பவரை, அமைச்சரின் உதவியாளராக நியமிக்க முயற்சித்து வருகிறார். அவரது உதவியுடனும், ஜெயசேகரன் என்பவரின் துணையுடனும், சென்னையில் தொடர காய் நகர்த்தி வருகிறார். நெடுஞ்சாலை துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பாபுஜி, 10 ஆண்டுகளாக ஒப்பந்ததாரர் பணிகளை எடுத்து செய்து வருவதாக தெரிகிறது. தற்போது, அமைச்சர் வீட்டில், அறிவிக்கப்படாத, பி.ஏ.,வாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த, 2018ல் ஒப்பந்ததாரர் ஒருவர் வீட்டில், வருமான வரி, 'ரெய்டு' நடந்தது. அப்போது, சென்னையில், ஜெமினி மேம்பாலத்தின் கீழ் இருந்த நெடுஞ்சாலை அலுவலக குடோனில் இருந்து, நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றியது.

அதன்பின் நடந்த மேல்மட்ட பேச்சால், குடோன் பொறுப்பாளராக இருந்த கோட்ட பொறியாளர் ரவி மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எதிர்க்கட்சி தலைவராக, கவர்னரை சந்தித்த ஸ்டாலின், அப்போது இ.பி.எஸ்., பதவி விலகவும், இதுகுறித்து விசாரணை நடத்தவும் வலியுறுத்தினார். இதேபோல, 20 ஆண்டுகளாக, தலைமை பொறியாளர் அலுவலகத்தில், கூடுதல் தலைமை பொறியாளராக சதானந்தம் பணிபுரிந்து வருகிறார். ஒப்பந்ததாரர்கள் நலனுக்காக திட்ட மதிப்பீடு தயாரித்து, லாபம் பார்க்க, முந்தைய ஆட்சியில், இவர் உதவியதாக புகார் உள்ளது.

முந்தைய ஆட்சியில் முறைகேடுகளுக்கு காரணமாக இருப்பதாக, முதன்மை தலைமை பொறியாளர் கோதண்டராமன் மீதும் புகார் எழுந்தது. இவருக்கு தற்போது, பசையான பதவி வழங்கப்பட்டு, அமைச்சருடன் வலம் வருகிறார். இதேபோல, பல அதிகாரிகளுக்கு இடமாற்றம் என்ற பெயரில், பசையான பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால், ஆட்சி மாறினாலும், நெடுஞ்சாலை துறையில் காட்சி மாறவில்லை என்ற புலம்பல் அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X