தொலைபேசி ஒட்டு கேட்பு; அரசியல்வாதிகள் அலறல்! | Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

தொலைபேசி ஒட்டு கேட்பு; அரசியல்வாதிகள் அலறல்!

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (9)
Share
-இஸ்ரேல் தொழில்நுட்பம் வாயிலாக, போன் ஒட்டுகேட்பு விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை மத்திய அரசு எப்படி எதிர்கொள்ள போகிறது என்பது ஒருபக்கம் இருக்க, தமிழகத்திலும் சர்ச்சை பேச்சு கிளம்பியுள்ளது. சர்ச்சை தமிழகத்தில் எப்போதெல்லாம், தி.மு.க., ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது, இந்த சர்ச்சை கிளம்புவது வாடிக்கையாகி உள்ளது. கடந்த 2006ல் தி.மு.க.,
தொலைபேசி ஒட்டு கேட்பு; அரசியல்வாதிகள் அலறல்!

-இஸ்ரேல் தொழில்நுட்பம் வாயிலாக, போன் ஒட்டுகேட்பு விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை மத்திய அரசு எப்படி எதிர்கொள்ள போகிறது என்பது ஒருபக்கம் இருக்க, தமிழகத்திலும் சர்ச்சை பேச்சு கிளம்பியுள்ளது.


சர்ச்சைதமிழகத்தில் எப்போதெல்லாம், தி.மு.க., ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது, இந்த சர்ச்சை கிளம்புவது வாடிக்கையாகி உள்ளது. கடந்த 2006ல் தி.மு.க., ஆட்சியில், உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர் சேட் மீது, போன் ஒட்டு கேட்பு புகார் எழுந்தது. அரசு தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவித்தாலும், அந்த சர்ச்சை வெகுகாலம் அடங்கவே இல்லை.

இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும், தி.மு.க., ஆட்சி ஏற்பட்டிருக்கும் சூழலில், அதே சர்ச்சை எழுந்துள்ளது. எங்கோ கடைகோடியில் இருக்கும் சாதாரண கட்சி தொண்டன் கூட, மொபைல் போனில் பேச அச்சப்பட்டு, போனை, 'கட்' செய்யும் நிகழ்வு நடக்கிறது. ஒட்டுகேட்க முடியாது என நம்பப்படும், 'வாட்ஸ் ஆப் கால்' வாயிலாக பேசி வருகின்றனர். இது குறித்து அ.தி.மு.க,வின் எம்.ஜி.ஆர்., மன்ற முன்னாள் செயலர் ஓமப்பொடி பிரசாத் கூறியதாவது:தி.மு.க., 2006ல் ஆட்சிக்கு வந்தது. கொஞ்ச காலத்துக்கு பின், ஜாபர் சேட் உளவுத்துறை தலைவரானார். 2011 வரை, அதே பொறுப்பில் இருந்தார்.


எச்சரிக்கைஅந்த சமயத்தில், சிறப்பு கருவிகள் வாயிலாக, மொபைல்போன் பேச்சுகளை பதிவு செய்கிறார் என, எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால், மொபைல் போன் வாயிலாக பேசுவதை தவிர்த்தோம். பின், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. எத்தனையோ பிரச்னைகளை அரசு சந்தித்தது. ஒரு நாள் கூட, போன் ஒட்டு கேட்பு குற்றச்சாட்டு எழுந்ததில்லை. தி.மு.க.,வினர் உள்ளிட்ட அனைவரும் சுதந்திரமாக பேசினர். இப்போது, பழைய நிலைமை திரும்பி விட்டது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் கட்சிக்காரர்கள், என்னை போன்றவர்களை
எச்சரிக்கின்றனர். கட்சி நிர்வாகிகள், மா.செ.,விடம் கூட போனில் பேச அச்சப்படுகிறோம். உளவுத்துறையினர், உரிய வழிமுறைகள் வாயிலாகவே, உறுதியான தகவல்களை சேகரித்து அரசுக்கு அளிக்க வேண்டுமே தவிர, குறுக்கு வழியில் தகவல் சேகரிக்க கூடாது. அப்படி செய்யும் போது, தவறுக்கு ஆட்படாத சரியான நபர்கள் கூட பாதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.


அச்சம்அ.தி.மு.க.,வினர் அச்சப்படுவது போல, தி.மு.க., உள்ளிட்ட பல கட்சி பிரமுகர்களும், அரசு உயர்நிலை அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும், மொபைல் போன் பேச்சு பதிவு செய்யப்படுகிறது, ஒட்டுகேட்பு நடக்கிறது எனக்கூறி அச்சப்படுகின்றனர்.
'அரசை தடுக்க முடியாது'

போன் ஒட்டு கேட்பு இன்று, நேற்று நடப்பது அல்ல. சம்பந்தமில்லாதவர்கள் போனை அரசு தரப்பில் இருப்பவர்கள், ஒரு நாளும் ஒட்டுகேட்க மாட்டார்கள். சதி வேலையில் ஈடுபடுவோரை கண்டறிந்து, அவர்கள் அந்த வேலையை உறுதியாக செய்கின்றனர் என்ற தகவல் கிடைத்ததும், அதை உள்துறை செயலருக்கு கொண்டு செல்வர்.
அதை, அவர் தலைமையிலான குழு தீவிரமாக ஆராயும். அந்த குழுவில், உள் துறை செயலர், காவல் துறை இயக்குனர், உளவுத்துறை தலைவர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலர் இருப்பர். யார் போனை கண்காணிக்க வேண்டும் என கவனமாக பரிசீலித்து, அவர்கள் அனுமதி கொடுப்பர்.
சிலருக்கு அனுமதி கொடுக்காமலும் போகலாம். அப்படி குழு ஒப்புதல் அளித்து விட்டால், குறிப்பிட்ட நபரின் போன், கண்காணிப்பு வளையத்துக்கு வந்து விடும். அவரது பேச்சு முழுதுமாக கண்காணிக்கப்படும். தேவையானால் ஒட்டு கேட்பும், பதிவும் நடக்கும்.

அதை யாரும் கேள்வி கேட்கவோ, தடுக்கவோ முடியாது. இதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. கோர்ட்டுக்கு போனாலும், வழக்கு நிற்காது. இப்படி பதிவு செய்யப்படும் உரையாடல், சம்பந்தப்பட்ட நபரின் தனி மனித சுதந்திரத்துக்கு எதிராக பொது வெளியில் வெளியிடப்பட்டால், அந்த நபர் கோர்ட்டுக்கு போகலாம்.
ஆனால், அரசு இப்படி செய்தது என்பதற்கான ஆதாரத்தை, கோர்ட்டுக்கு சம்பந்தப்பட்ட நபர் தான் வழங்க வேண்டும். மற்றபடி, சாதாரண அரசியல்வாதிகள், பொதுமக்கள் மொபைல் போன் பதிவு செய்யப்படுகிறது, ஒட்டு கேட்கப்படுகிறது என்பது, அதீத கற்பனை;
தேவையில்லாத அச்சம். கருணாநிதி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி -- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X