வெளியானது பிளஸ் 2 ரிசல்ட் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்

Added : ஜூலை 19, 2021
Share
சென்னை : பொதுத் தேர்வு இன்றி, 'ஆல் பாஸ்' செய்யப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் விபரம் நேற்று வெளியானது. தமிழக பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் முதல் முறையாக, மாணவ - மாணவியர் என, 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால், இந்தாண்டுக்கான பிளஸ் 2 தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது. நிர்ணயம்இதையடுத்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த ஆண்டுகளில் படித்த

சென்னை : பொதுத் தேர்வு இன்றி, 'ஆல் பாஸ்' செய்யப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் விபரம் நேற்று வெளியானது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் முதல் முறையாக, மாணவ - மாணவியர் என, 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால், இந்தாண்டுக்கான பிளஸ் 2 தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது. நிர்ணயம்இதையடுத்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த ஆண்டுகளில் படித்த வகுப்புகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடிவானது.பத்தாம் வகுப்பில் அதிகபட்ச மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களின் சராசரியில், 50 சதவீதம்; பிளஸ் 1ல் ஒவ்வொரு பாடங்களிலும் எழுத்து தேர்வு மதிப்பெண்ணில், 20 சதவீதம்.பிளஸ் 2 செய்முறை தேர்வில் வழங்கப்பட்ட, 30 மதிப்பெண் சேர்க்கப்பட்டு, மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த மதிப்பெண் விபரம் நேற்று வெளியானது. அரசு தேர்வுத் துறை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ், மதிப்பெண் விபரங்களை வெளியிட்டார். பங்கேற்புதமிழக பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில், பிளஸ் 1, பிளஸ் 2 முறை அறிமுகமாகி, 42 ஆண்டுகளில் முதல் முறையாக, பிளஸ் 2 படித்த மாணவ - மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதாவது, தமிழக அரசின் வழிகாட்டலின்படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்த அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வு நடத்தப்பட்டால், மாணவர்களை விட மாணவியர், 5 முதல், 7 சதவீதம் வரை அதிக தேர்ச்சி பெறுவது வழக்கம். இந்த முறை ஆல் பாஸ் அறிவிப்பால், மாணவியருக்கு இணையாக மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிளஸ் 1ல் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத, 33 ஆயிரத்து 557 பேர், அவர்கள் பிளஸ் 2 வகுப்பில் பங்கேற்றதால், பிளஸ் 1 'அரியர்' இருந்தாலும், பிளஸ் 2 தேர்ச்சி செய்யப்பட்டு உள்ளனர்.இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட புள்ளி விபரம்:அரசு தேர்வுத் துறையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக, 7,400 பள்ளிகளைச் சேர்ந்த, எட்டு லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.

அவர்களில், 4.36 லட்சம் பேர் மாணவர்கள், 3.80 லட்சம் பேர் மாணவியர். இவர்களில், தொழிற்கல்வி பிரிவில் படித்தவர்கள், 51 ஆயிரத்து 880 பேர். பொதுப் பாடப் பிரிவில் படித்தவர்கள், ஏழு லட்சத்து 64 ஆயிரத்து 593 பேர் ஆவர். மாற்றுத்திறனாளி மாணவர்கள், 2,821 பேர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவ்வாறு அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. மதிப்பெண் விபரம் வெளியிட்ட நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி அமைச்சருடன், பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார், தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'டெசிமல்' முறையில் மதிப்பெண்இந்த ஆண்டு பிளஸ் 2 மதிப்பெண்களை விகிதாச்சாரத்தின் படி கணக்கிட்டு, அரசு தேர்வுத் துறை நிர்ணயித்துள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண்கள் விகிதாச்சாரத்தில் கணினி முறையில் நிர்ணயிக்கப் பட்டுள்ளன. அதனால், மதிப்பெண்கள் மிக சரியாக, 'டெசிமல்' எனப்படும், தசம எண் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.எனவே, மதிப்பெண்கள் முழு எண்ணாக மாற்றப்படாமல், அப்படியே டெசிமல் முறையிலேயே வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X