பொது செய்தி

தமிழ்நாடு

டி.டி.சி.பி.,யில் அதிகார பகிர்வு: அரசு பரிசீலனை

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
சென்னை : கட்டுமான அனுமதிக்கு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை, டி.டி.சி.பி., மாவட்ட அலுவலகங்களுக்கு பகிர்ந்து அளிக்க, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. சென்னை பெருநகருக்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு, கட்டுமான திட்ட அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் டி.டி.சி.பி., எனப்படும், நகர் மற்றும் ஊரமைப்புத்துறை கட்டுப்பாட்டில் வருகின்றன. இதன் நிர்வாக வசதிக்காக, உள்ளூர் வளர்ச்சி

சென்னை : கட்டுமான அனுமதிக்கு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை, டி.டி.சி.பி., மாவட்ட அலுவலகங்களுக்கு பகிர்ந்து அளிக்க, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

சென்னை பெருநகருக்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு, கட்டுமான திட்ட அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் டி.டி.சி.பி., எனப்படும், நகர் மற்றும் ஊரமைப்புத்துறை கட்டுப்பாட்டில் வருகின்றன. இதன் நிர்வாக வசதிக்காக, உள்ளூர் வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.இருப்பினும், கட்டுமான திட்ட அனுமதி தொடர்பான விண்ணப்பங்களை பெறவும், கள ஆய்வு பணிகளை முடிக்கவும், மாவட்ட அளவில், டி.டி.சி.பி., அலுவலகங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன;

அவற்றுக்கு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தரப்படவில்லை.கோப்புகளை சென்னைக்கு அனுப்பி, இறுதி முடிவு எடுக்கும் நிலை உள்ளதால், கட்டுமான திட்ட அனுமதி பெறுவதில், அதிக தாமதம் ஏற்படுவதாக புகார் கூறப்படுகிறது. இது குறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தினர் கூறியதாவது:மாவட்ட அளவிலான விண்ணப்பம் தொடர்பான கோப்புகளை, சென்னையில் உள்ள, டி.டி.சி.பி., தலைமை யகத்திற்கு அனுப்பி, இறுதி முடிவு எடுக்கும் நிலை உள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கியது போல, டி.டி.சி.பி., மாவட்ட அலுவலகங்களுக்கும் அதிகார பகிர்வு வழங்க வேண்டும்.அப்போது தான், திட்ட அனுமதி பணிகள் விரைவாக முடியும். இது தொடர்பான கோரிக்கை மனு அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில், மாவட்ட அலுவலகங்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை, வீட்டுவசதி துறை ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும், அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X