கட்சியை வலுப்படுத்துவேன்! | Dinamalar

கட்சியை வலுப்படுத்துவேன்!

Added : ஜூலை 19, 2021
Share
என் மீது நம்பிக்கை வைத்து, கட்சியின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கியுள்ள சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். இனி, காங்., குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் இணைந்து பணியாற்றி கட்சியை வலுப்படுத்துவேன். - நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில தலைவர், காங்கிரஸ் அதீத நம்பிக்கை! மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலுக்குப் பின், எங்கள்
 கட்சியை வலுப்படுத்துவேன்!

என் மீது நம்பிக்கை வைத்து, கட்சியின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கியுள்ள சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். இனி, காங்., குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் இணைந்து பணியாற்றி கட்சியை வலுப்படுத்துவேன்.

- நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில தலைவர், காங்கிரஸ்

அதீத நம்பிக்கை!

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலுக்குப் பின், எங்கள் கட்சித் தலைவர்களில் பலருக்கு, அதீத நம்பிக்கை வந்துவிட்டது. 170 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என எண்ணினர். அதனால் தான் நாங்கள் தோல்வி அடைந்தோம்.

- சுவேந்து அதிகாரி, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர், பா.ஜ.,

தேர்தல் யுக்தி!

பிராமணர் மீது பகுஜன் சமாஜ் கட்சி காட்டும் பாசம், தேர்தலுக்கான யுக்தி.ஒரு காலத்தில் பிரஜேஷ் பதக் உள்ளிட்ட பிராமண தலைவர்கள் இக்கட்சியில் இருந்தனர். எனினும், இப்போது மூழ்கும் கப்பலாக உள்ள இந்த கட்சியுடன் யாரும் இல்லை.

- அஸ்லாம் ரைனி, அதிருப்தி தலைவர், பகுஜன் சமாஜ்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X