மணிப்பூர் அரசியல் விமர்சகரை விடுதலை செய்ய உத்தரவு

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
புதுடில்லி : தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, மணிப்பூரைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் லீசோம்பம் எரன்ட்ரோவை உடனடியாக விடுதலை செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளம்மணிப்பூரில் முதல்வர் பைரோன் சிங் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. 'மாட்டின் சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவை கொரோனாவை குணப்படுத்துகின்றன' என, பா.ஜ.,வைச் சேர்ந்த சில

புதுடில்லி : தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, மணிப்பூரைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் லீசோம்பம் எரன்ட்ரோவை உடனடியாக விடுதலை செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைதளம்மணிப்பூரில் முதல்வர் பைரோன் சிங் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. 'மாட்டின் சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவை கொரோனாவை குணப்படுத்துகின்றன' என, பா.ஜ.,வைச் சேர்ந்த சில தலைவர்கள் கூறிஇருந்தனர். இந்நிலையில், மணிப்பூர் பா.ஜ., தலைவர் ஒருவர் கொரோனாவில் உயிரிழந்தபோது, அதை விமர்சித்து, லீசோம்பம் எரன்ட்ரோ, சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். அதை பின் நீக்கிஉள்ளார்.இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: அரசியல் விமர்சனத்தை முன்வைத்ததால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து உள்ளதை ஏற்க முடியாது.

பேச்சு சுதந்திரம் : இது தனிமனித உரிமைகளையும், பேச்சு சுதந்திரத்தையும் மீறும் செயல். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மணிப்பூர் சிறை அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதை யடுத்து நேற்று மாலை லீசோம்பம் விடுவிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X