அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை நிகழ்ச்சி ஒளிபரப்பு : நடிகர் கமல் வலியுறுத்தல்

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை : 'தமிழக சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரியதை, அ.தி.மு.க., அரசு தள்ளிப் போட்டது. தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, தி.மு.க., அதை செய்யுமா' என, கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிக்கை: கட்சி துவங்கிய நாளில் இருந்தே, வெளிப்படையான அரசு நிர்வாகத்தை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதன்
சட்டசபை நிகழ்ச்சி ஒளிபரப்பு  நடிகர் கமல் வலியுறுத்தல்

சென்னை : 'தமிழக சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரியதை, அ.தி.மு.க., அரசு தள்ளிப் போட்டது. தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, தி.மு.க., அதை செய்யுமா' என, கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிக்கை: கட்சி துவங்கிய நாளில் இருந்தே, வெளிப்படையான அரசு நிர்வாகத்தை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதன் வாயிலாக, மக்கள் பிரதிநிதிகள், பொதுப் பிரச்னைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களை, சாமான்ய மக்களும் அறிய முடியும்.இதுகுறித்து, 2012ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தொடுத்த பொதுநல வழக்கை, அப்போதைய அ.தி.மு.க., அரசு சாக்குபோக்கு சொல்லி, நிலுவையில் போட்டு விட்டது.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியில், 'சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம்' என, கூறப்பட்டிருந்தது. ஆனால், முதல் சட்டசபை தொடரின், கவர்னர் உரையின் முழு நிகழ்வையும் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை.

'நடக்க உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில், துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் முழுவதையும், நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்.கொரோனா பெருந்தொற்று காலத்தில், பத்திரிகையாளர்கள் சட்டசபை வளாகத்தில் அதிகம் கூடுவதையும், இது தவிர்க்க உதவும். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு, இணையவழி நேரடி ஒளிபரப்பு செய்வது சவாலான விஷயமாக இருக்காது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - stockholm,சுவீடன்
21-ஜூலை-202100:13:32 IST Report Abuse
srinivasan Kamalaa hassan is the hero. Who is the heroine,?
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
20-ஜூலை-202123:06:13 IST Report Abuse
Mohan அய்யே.
Rate this:
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
20-ஜூலை-202116:32:27 IST Report Abuse
sathish யாராவது இந்த கோமாளியை தூக்கி கொண்டு போயி யாரும் இல்லா காட்டில் விட்டு விட்டு வருவீர்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X