நீலகிரி, கோவை மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கன மழை வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கன மழை வாய்ப்பு

Added : ஜூலை 19, 2021
Share
சென்னை : நீலகிரி, கோவை மாவட்டங்களில், நான்கு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.நாளை

சென்னை : நீலகிரி, கோவை மாவட்டங்களில், நான்கு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.நாளை முதல் மூன்று நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.

கடலோர மாவட்டங்களில் லேசான மழை இருக்கும்.வடமேற்கு வங்கக்கடலில், 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், சின்ன கல்லாரில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X