சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈ.வெ.ரா., மீது போலீசில் புகார்

Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : 'தமிழர் பண்பாடு மற்றும் கலாசார சீரழிவை ஏற்படுத்திய, ஈ.வெ.ராமசாமி குறித்து பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள பதிவுகளை நீக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, பரங்கிமலையை சேர்ந்தவர் கோபால்; இந்து தமிழர் பேரவை பொதுச் செயலரான இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:தி.க., தலைவராக இருந்த, ஈ.வெ.ராமசாமி, 'கடவுள் இல்லை;

சென்னை : 'தமிழர் பண்பாடு மற்றும் கலாசார சீரழிவை ஏற்படுத்திய, ஈ.வெ.ராமசாமி குறித்து பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள பதிவுகளை நீக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, பரங்கிமலையை சேர்ந்தவர் கோபால்; இந்து தமிழர் பேரவை பொதுச் செயலரான இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:தி.க., தலைவராக இருந்த, ஈ.வெ.ராமசாமி, 'கடவுள் இல்லை; கடவுளை கற்பிப்பவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறோவன் காட்டுமிராண்டி' என, குறிப்பிட்டுள்ளார். அவரின் சிலைகளுக்கு கீழ், இந்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. கடவுள் இல்லை என குறிப்பிடும், ஈ.வெ.ரா., எந்த மதத்தைச் சேர்ந்த கடவுளை இல்லை என்கிறார் என்பதை, தற்போது தி.க., தலைவராக உள்ள வீரமணி தெளிவுப்படுத்த வேண்டும்.

\ இந்த வரிகள் ஜனநாயக படுகொலைக்கு நிகரானது. போலீசார் இந்த வரிகளை நீக்க வேண்டும். ஈ.வெ.ரா.,வுக்கு, 'யுனெஸ்கோ' விருது வழங்கி இருப்பதாக, 50 ஆண்டுகளாக பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அதுபோன்ற விருது ஏதும் வழங்கவில்லை என, தெரிகிறது.தமிழை காட்டுமிராண்டி மொழி என கூறியவர் ஈ.வெ.ராமசாமி. அவரின் வரலாற்றை போலீசார் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்தில், ஈ.வெ.ரா.,வுக்கு பெயரில் கூட பங்கு இல்லை. வைக்கம் வீரர், பெண்களுக்காக போராடியவர் என்பதெல்லாம் பொய்.

இதுபற்றி விசாரிக்க வேண்டும்.தமிழர் பண்பாடு மற்றும் கலாசார சீரழிவை ஏற்படுத்திய ஈ.வெ.ரா., குறித்து பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள பதிவுகளை நீக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் சிறைச்சாலை நுாலகங்களில் உள்ள, ஈ.வெ.ரா., குறித்த புத்தகங்களை தடை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
20-ஜூலை-202105:09:03 IST Report Abuse
John Miller பெரியார் இவனை போன்றவர்களைத்தான் முட்டாள், காட்டுமிராண்டி என சரியாக சொல்லியுள்ளார்.
Rate this:
sivan - seyyur,இந்தியா
21-ஜூலை-202102:10:48 IST Report Abuse
sivan முதலில் பெரியார் என்ற இந்த ஆளின் பெயரை மாற்ற சொல்ல வேண்டும். இந்த ஆள் யாருக்கு பெரியார்? கொள்ளை அடிக்கும் கூட்டத்திற்கு பெரியார் என்றால் .. அவர்கள் கொண்டாடிக் கொள்ளட்டும். ஒட்டு மொத்த தமிழகதத்திற்கும் இந்த ஆள் என்ன பெரியார் என்று கொண்டாட வேண்டி உள்ளது?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X