சில வரி செய்திகள் - இந்தியா

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
நக்விக்கு புதிய பதவி? புதுடில்லி: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் ராஜ்யசபாவின் சபை முன்னவராக நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், துணை தலைவராக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நியமிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. கடந்த முறை பார்லி., விவகாரங்கள் துறை இணை அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் இப்பதவிக்கு தகுதியானவர் என, மத்திய அரசு

நக்விக்கு புதிய பதவி?

புதுடில்லி: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் ராஜ்யசபாவின் சபை முன்னவராக நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், துணை தலைவராக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நியமிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. கடந்த முறை பார்லி., விவகாரங்கள் துறை இணை அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் இப்பதவிக்கு தகுதியானவர் என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

வீடுகள் இடிந்து 3 பேர் பலி

சீதாபூர்: உத்தர பிரதேசத்தின் சீதாபூர் மாவட்ட கிராமத்தில் நேற்று முன்தினம் மழையால் வீடு இடிந்து, இரண்டு பேர் பலியாயினர். நேற்றைய மழையில், சம்பல் மாவட்ட கிராமத்தில் வீடு இடிந்து, சிறுவன் பலியானார். காயமடைந்த மூவர், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

அசம் கான் உடல்நிலை மோசம்

சீதாபூர்: உத்தர பிரதேசத்தில் மோசடி வழக்கில் கைதாகி சீதாபூர் மாவட்ட சிறையில் இருக்கும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம் கான், சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்டார். சமீபத்தில் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சீதாபூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று காலை மோசமானதுடன், ஆக்சிஜன் அளவு குறைந்ததால், உடனடியாக லக்னோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பதுங்கி இருந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு, நம் வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதில் பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபரான இஷ்பார் தார் என்ற அபு அக்ரம் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.


ரயில் சேவை பாதிப்பு

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் நேற்று முன்தினம் 30 பேரை பலி வாங்கிய பலத்த மழை இன்னும் ஓயவில்லை. நேற்று காலை பல்வேறு பகுதிகளில் பெருமழை நீடித்தது. இதனால் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி, புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சில பகுதிகளுக்கு தாமதமாகவும், சில இடங்களுக்கு குறைந்த வேகத்திலும் ரயில்கள் இயக்கப்பட்டன.

'பிங்க்' பாதுகாப்பு திட்டம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா ஊரடங்கின்போது பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை, 'ஆன்லைன்' குற்றங்கள் அதிகரித்ததால், அவற்றை தடுக்க 'பிங்க் பாதுகாப்பு திட்டம்' நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பெண் போலீசார், சம்பவ இடத்தில் நேரடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பர். இந்த திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நேற்று துவக்கி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X