தி.மு.க., - எம்.பி., மீதான வன்கொடுமை வழக்கு ரத்து

Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,யான பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க., சார்பில் 2020ல் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பட்டி யலினத்தவர் குறித்து பாரதி பேசினார். இது தொடர்பாக ஆதி தமிழர் மக்கள் கட்சி சார்பில் அளித்த புகாரில், பாரதிக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில்

புதுடில்லி : தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,யான பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க., சார்பில் 2020ல் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பட்டி யலினத்தவர் குறித்து பாரதி பேசினார். இது தொடர்பாக ஆதி தமிழர் மக்கள் கட்சி சார்பில் அளித்த புகாரில், பாரதிக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாரதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், அனிருத்தா போஸ் அடங்கிய அமர்வு, 'பாரதியின் பேச்சு, வன்கொடுமை சட்டத்துக்கு எதிராக இல்லை. அதனால் அவர் மீதான வழக்கு விசாரணை ரத்து செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganesha - tamilnadu,இந்தியா
20-ஜூலை-202107:27:03 IST Report Abuse
ganesha இதெல்லாம் இனிமே ஜகஜம்ப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X