250 ஆண்டுகளுக்கு பின் ராணுவ நில கொள்கை மாற்றம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

250 ஆண்டுகளுக்கு பின் ராணுவ நில கொள்கை மாற்றம்

Added : ஜூலை 19, 2021
Share
புதுடில்லி : ராணுவத்துக்கு சொந்த மான நிலங்கள் தொடர்பான கொள்கையில், 250 ஆண்டுகளுக்கு பின் புதிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், 1765ல் மேற்கு வங்கத்தின் பராக்புரில் நாட்டின் முதல், 'கன்டோன்மென்ட்' எனப்படும் ராணுவ முகாம் அமைக்கப்பட்டது.கன்டோன்மென்ட்கடந்த 1801ல் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரல் கவுன்சில் பிறப்பித்த உத்தரவில்,

புதுடில்லி : ராணுவத்துக்கு சொந்த மான நிலங்கள் தொடர்பான கொள்கையில், 250 ஆண்டுகளுக்கு பின் புதிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், 1765ல் மேற்கு வங்கத்தின் பராக்புரில் நாட்டின் முதல், 'கன்டோன்மென்ட்' எனப்படும் ராணுவ முகாம் அமைக்கப்பட்டது.கன்டோன்மென்ட்கடந்த 1801ல் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரல் கவுன்சில் பிறப்பித்த உத்தரவில், 'ராணுவத்துக்கு சொந்தமான பங்களாக்கள் அல்லது தங்குமிடங்களை ராணுவத்தை சாராதவர்களுக்கு விற்கவோ, தங்கவோ அனுமதிக்க முடியாது' எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த 250 ஆண்டுகளில் சில மாறுதல்கள் வந்தாலும், ராணுவ நிலம் தொடர்பான கொள்கையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ராணுவத்தின் புள்ளி விபரங்களின்படி நாடு முழுதும் 17.95 லட்சம் ஏக்கர் நிலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் 16.35 லட்சம் ஏக்கர் நிலம், 62 கன்டோன்மென்ட் பகுதிகளுக்கு வெளியே உள்ளது.நாடு முழுதும் வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் தேவைப்படும் நிலையில், ராணுவத்திடம் பயன்படுத்தப்படாத நிலம் அதிகம் உள்ளது. இந்த நிலங்கள் விற்பனை செய்வது தொடர்பாக, நீண்டகாலமாக பேசப்படுகிறது.இதற்கிடையே கன்டோன்மென்ட் பகுதிகளில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான மசோதாவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்தாண்டு பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ளது.

கடந்த 250 ஆண்டுகளில் இல்லாத புதிய கொள்கையை மத்திய அரசு தற்போது உருவாக்கி யுள்ளது. தற்போதைய சட்டங்களின்படி ராணுவத்தின் நிலத்தை அரசு பணிகளுக்காக பரிமாறிக் கொள்ளலாம். அதற்கு பதிலாக அந்த நிலத்தின் மதிப்புக்கு நிகரான நிலத்தை வேறொரு இடத்தில் ராணுவத்துக்கு அளிக்க வேண்டும்.கட்டமைப்பு வசதி புதிய கொள்கை யின்படி சாலைகள், மெட்ரோ, ரயில்வே திட்டங்களுக்காக ராணுவத்திடம் இருந்து நிலங்களை வாங்கலாம்.

அந்த நிலத்துக்கான மதிப்புக்கு நிகராக ராணுவம் குறிப்பிடும் இடத்தில், அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும்.இதன் வாயிலாக பொதுமக்களுக்கான கட்டமைப்பு வசதிகளும் கிடைக்கும். ராணுவத்துக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளும் கிடைக்கும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X