பொது செய்தி

தமிழ்நாடு

சிக்குது... கண்ண கட்டுது...! குடிநீர் குழாய் பதிப்பை விரைந்து முடிங்க... உருளைக்கிழங்கு வர்த்தக சபை கோரிக்கை

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:'தினமும் ஏராளமான லாரிகள் சேற்றில் சிக்குவதால், திருப்பூர் குடிநீர் திட்டம் குழாய் பதிக்கும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும்' என, உருளைக்கிழங்கு வர்த்தக சபை நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் நகரில், திருப்பூர் மாநகராட்சி நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. தற்போது உருளைக்கிழங்கு மண்டிகள் அதிகமுள்ள,
 சிக்குது... கண்ண கட்டுது...! குடிநீர் குழாய் பதிப்பை விரைந்து முடிங்க... உருளைக்கிழங்கு வர்த்தக சபை கோரிக்கை

மேட்டுப்பாளையம்:'தினமும் ஏராளமான லாரிகள் சேற்றில் சிக்குவதால், திருப்பூர் குடிநீர் திட்டம் குழாய் பதிக்கும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும்' என, உருளைக்கிழங்கு வர்த்தக சபை நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் நகரில், திருப்பூர் மாநகராட்சி நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன.

தற்போது உருளைக்கிழங்கு மண்டிகள் அதிகமுள்ள, நெல்லித்துறை சாலையில் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. இச்சாலையில் மூன்று இடங்களில் பெரிய அளவில் குழிதோண்டி உள்ளதால், லாரிகள் ஏதும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழாய் பாதித்த பகுதிகளில், உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றி வந்த லாரிகள், சேற்றிலும், குழியிலும் சிக்கிக் கொள்கின்றன.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகள் வர்த்தக சபை செயலாளர் ரங்கசாமி கூறியதாவது:மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில், 75க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. இங்கு இரவு, பகலாக, 150க்கும் மேற்பட்ட லாரிகளில், கிழங்கு மூட்டைகளை இறக்கி, ஏற்றும் பணிகள் நடக்கின்றன. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பின் பேரில், தென் திருப்பதி நால்ரோடு பகுதியில், திறந்த வெளியில், கிழங்குகளை விற்பனை செய்து வந்தோம்.
அப்போது, திருப்பூர் மாநகராட்சி நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகளை, உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ள பகுதிகளில், விரைந்து முடிக்கும் படி கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதிகாரிகள் குழாய் பதிக்காமல் காலம் கடத்தி வந்தனர். தற்போது நெல்லித்துறை சாலையில், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடக்கின்றன.இச்சாலையில் குழாய் பதித்து மண்மூடிய பகுதிகளில், மழை பெய்ததால் தினமும், உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிய நான்கைந்து லாரிகள், சேற்றிலும், குழியிலும் சிக்கிக் கொள்கின்றன. கிரேன் வாயிலாக நீண்ட நேர போராட்டத்துக்கு பின், லாரிகளை மீட்க வேண்டியுள்ளது. இதனால், வியாபாரம் பாதிப்பதோடு, குறிப்பிட்ட நேரத்துக்கு லாரிகள், மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

தற்போது குழாய் பதிக்கும் சாலையில், களிமண் நிறைந்து உள்ளதால், அப்பகுதியில் களிமண்ணை அகற்றி விட்டு, வேறொரு மண் கொட்டி சாலையை சீரமைக்க வேண்டும். குழாய் பதிக்க குழி தோண்டும் போது, திருப்பூர், மேட்டுப்பாளையம் குடிநீர் திட்ட பிரதான குழாய், பகிர்மான குழாய்கள் உடைந்து, குழிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மேலும் பாதாள சாக்கடை குழாய்களும், சேகரிப்புத் தொட்டிகளும் உடைந்துள்ளன. எனவே, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், இக்குழாய்களை சீரமைத்து, விரைவாக குழாய்களை பதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.நடவடிக்கை எடுக்கப்படும்குடிநீர் வடிகால் வாரிய திட்ட அதிகாரிகள் ஜெயக்குமார், தர்மராஜ் ஆகியோர் கூறுகையில், 'நெல்லித்துறை சாலையில் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. களிமண் பூமி என்பதால், மழை பெய்தவுடன் சேறும், சகதியும் ஏற்படுகிறது. இதனால் குழாய் அமைக்கும் பணிகளும் பாதிப்படைகின்றன. எனவே இங்கு களி மண்ணை அகற்றி விட்டு, வேறு மண்ணை கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X