தரம் பிரித்து கொடுத்தால் உரம் அதிகாரிகள் குழுவினர் அறிவுரை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தரம்' பிரித்து கொடுத்தால் 'உரம்' அதிகாரிகள் குழுவினர் அறிவுரை

Added : ஜூலை 19, 2021
Share
சூலுார்:''மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க, பொதுமக்கள் முன்வர வேண்டும்' என, உலக வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னியம்பாளையம் ஊராட்சியில், மக்கும் குப்பையை உரமாக்கும் 'மைக்ரோ கம்போசிட் சென்டர்' அமைக்கும் பணி நடக்கிறது. இப்பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை, மக்கும் மற்றும் மக்காத குப்பை, துாய்மை

சூலுார்:''மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க, பொதுமக்கள் முன்வர வேண்டும்' என, உலக வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னியம்பாளையம் ஊராட்சியில், மக்கும் குப்பையை உரமாக்கும் 'மைக்ரோ கம்போசிட் சென்டர்' அமைக்கும் பணி நடக்கிறது. இப்பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை, மக்கும் மற்றும் மக்காத குப்பை, துாய்மை பணியாளர்களால் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கவும், மக்காத குப்பையை மறுசுழற்சி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உலக வங்கி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் குழுவினர், மையத்தை ஆய்வு செய்தனர். மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது குறித்து விளக்கினர். ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி தேவராஜன் மற்றும் ஒன்றிய அலுவலர்களிடம், குப்பையை தரம் பிரிப்பது குறித்து கேட்டறிந்தனர்.அதிகாரிகள் கூறியதாவது:வீடுகளில், காய்கறி கழிவுகள் உட்பட மக்கும் குப்பையை தனியாகவும், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பையை தனியாகவும் பிரித்து சேகரித்து வைக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அது மக்களின் கடமை.வீடு, வீடாக வந்து அவற்றை சேகரிக்கும் துாய்மை பணியாளர்கள், மையத்துக்கு கொண்டு வந்து மக்கும் குப்பையை உரமாக்கவும், மக்காத குப்பையை மறு சுழற்சி செய்யவும் எளிதாக இருக்கும். துாய்மை காவலர்கள் இல்லையெனில், ஊராட்சியின் துாய்மை கேள்விக்குறியாகிவிடும். அதனால், குப்பையை தரம் பிரித்து வழங்க, மக்கள்ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X