அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் தாக்கல் எப்போது?

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : சட்டசபை நுாற்றாண்டு விழாவுக்கு, ஜனாதிபதி வரும் தேதிக்கு ஏற்ப சட்டசபை கூட்டத்தொடர் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில், 2020 - 21ம் ஆண்டு இறுதி பட்ஜெட், இம்மாதம் இறுதியில் தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. பின், ஆகஸ்டில் தாக்கலாகும் என்று தகவல் வெளியானது.இந்நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்று ஜனாதிபதியை சந்தித்தார். சட்டசபை
தமிழகம் பட்ஜெட்,

சென்னை : சட்டசபை நுாற்றாண்டு விழாவுக்கு, ஜனாதிபதி வரும் தேதிக்கு ஏற்ப சட்டசபை கூட்டத்தொடர் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில், 2020 - 21ம் ஆண்டு இறுதி பட்ஜெட், இம்மாதம் இறுதியில் தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. பின், ஆகஸ்டில் தாக்கலாகும் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்று ஜனாதிபதியை சந்தித்தார். சட்டசபை நுாற்றாண்டு விழா, சட்டசபையில் கருணாநிதி படம் திறப்பு விழா, மதுரையில் கருணாநிதி பெயரில் அமைய உள்ள நுாலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களை நடத்தி வைக்க வரும்படி, ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.


latest tamil news


இவ்விழாக்களை, கருணாநிதி மறைந்த தினமான, ஆக., 7ல் நடத்த, முதல்வர் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி விழாவுக்கு வர ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், தேதியை ஓரிரு நாளில் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.அவர் அளிக்கும் தேதியை பொறுத்து, சட்டசபை கூட்டத் தொடர் தேதியை அறிவிக்க, அரசு முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
20-ஜூலை-202110:36:10 IST Report Abuse
duruvasar 4 மேதைகள் பிளஸ் ஒரு மாமேததை இவர்களுகக்கு தலைவராக ஒரு பாரம்பரிய மஹா மாமேதை என ஒரு பெரிய அறிவார்ந்த கூட்டம் போடும் பட்ஜட். இதை உலக அளவில் பொருளாதார கத்துகுட்டிகள் ஆவலுடன் காண காத்துகிடக்கிறார்கள்.
Rate this:
Cancel
N V VENKAT - Chennai,இந்தியா
20-ஜூலை-202110:02:34 IST Report Abuse
N V VENKAT நம்முடைய மாண்புமிகு மெத்த படித்த அறிவொளி நிதி அமைச்சர் என்ன செய்து விடியலை காட்டபொகிறார் என்று அமெரிக்காவை சார்ந்த திவால் ஆன எல்லா நிதி நிறுவனங்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்ரநர்
Rate this:
Cancel
rupya -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூலை-202107:32:15 IST Report Abuse
rupya பட்ஜெட் தாக்கலில் தேர்தலுக்கு முன் மக்களுக்கு அதை செய்வேன் இதை செய்வேன் என்று வாக்களித்து ஆட்சி பிடித்து அதன்படி நிறைவேறாத மற்றும் நிறைவேறிய விவரங்கள் ஒன்று விடாமல் சேர்க்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X