எங்ககிட்டியேவா... மிரட்டிய மூவருக்கு காப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எங்ககிட்டியேவா... மிரட்டிய மூவருக்கு காப்பு

Added : ஜூலை 20, 2021
Share
மேட்டுப்பாளையம்:கஞ்சா விற்பனை குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தவருக்கு, கொலை மிரட்டல் விடுத்த மூவரை, போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் ஊமப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இதேபகுதியை சேர்ந்த முத்துக்குமார், நந்தகுமார், சந்தோஷ்குமார் ஆகிய மூவரும், கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மாரியப்பன், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம்:கஞ்சா விற்பனை குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தவருக்கு, கொலை மிரட்டல் விடுத்த மூவரை, போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் ஊமப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இதேபகுதியை சேர்ந்த முத்துக்குமார், நந்தகுமார், சந்தோஷ்குமார் ஆகிய மூவரும், கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மாரியப்பன், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் மூவரையும் பிடித்து கைது செய்தனர்.சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், மூவரும், மாரியப்பனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். 'எங்களை போலீசில் காட்டிக் கொடுத்ததால், 20 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த தொகையை கொடுக்கவில்லை என்றால், கொலை செய்து விடுவோம்' என, கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. மாரியப்பன் சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்ததை பார்த்த மூவரும் தப்பினர். மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் எஸ்.ஐ.க்கள் தாமோதரன், செல்வநாயகம், முருகேசன் மற்றும் போலீசார், மிரட்டிய மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X