பொது செய்தி

தமிழ்நாடு

உலா வந்த தகவல்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் அதிகரித்துள்ளது.கோவை மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக கருமத்தம்பட்டி, சூலுார் பேரூராட்சிகள் உள்ளன. இரு பேரூராட்சிகளிலும், தலா, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆண்டு வருமானம், ரூ.3 கோடிக்கு மேல் உள்ளது.கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் அதிகரித்துள்ளது.கோவை மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக கருமத்தம்பட்டி, சூலுார் பேரூராட்சிகள் உள்ளன. இரு பேரூராட்சிகளிலும், தலா, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆண்டு வருமானம், ரூ.3 கோடிக்கு மேல் உள்ளது.கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரத்தில் பல்லாயிரக்கணக்கான விசைத்தறிகள், 100க்கணக்கான ஸ்பின்னிங் மில்கள் செயல்படுகின்றன.
சூலுாரில் இன்ஜினியரிங் தொழிற்சாலைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. குடியிருப்பு பகுதிகளும் விரிவடைந்து வருகின்றன.ஆனால், அதற்கேற்ற கட்டமைப்புகள் இல்லாமல் உள்ளது. சாலை வசதி, சாக்கடை மற்றும் குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். கடந்த, 2011ல் இருந்த ஆண்டு வருமானம் மற்றும் மக்கள் தொகை, இரு பேரூராட்சிகளிலும் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. அதனால், நகராட்சியாக தரம் உயர, இரு பேரூராட்சிகளுக்கும் தகுதி உள்ளது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில், கருமத்தம்பட்டி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக வந்த தகவல் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.அதிகாரிகள் கூறுகையில், 'பேரூராட்சிகளை, நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்புகளும் இதுவரை வரவில்லை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X