பொது செய்தி

இந்தியா

ரியல் எஸ்டேட் தொழிலாக மாறிய மருத்துவமனைகள் : சுப்ரீம் கோர்ட்

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா காலத்தில் மருத்துவமனைகள் மனிதநேயத்தை மறந்து ரியல் எஸ்டேட் தொழிற்சாலைகள் போல மாறி விட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு குஜராத் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா நோயாளிகள் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு

புதுடில்லி : கொரோனா காலத்தில் மருத்துவமனைகள் மனிதநேயத்தை மறந்து ரியல் எஸ்டேட் தொழிற்சாலைகள் போல மாறி விட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



latest tamil news



கடந்த ஆண்டு குஜராத் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா நோயாளிகள் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. அனைத்து மாநிலங்களும் மாவட்டம் தோறும் குழு அமைத்து மருத்துவமனைகளின் தீ தடுப்பு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தி மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது. நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ள மருத்துவமனைகளை மூடலாம் என்றும் பரிந்துரைத்தது.


latest tamil news



இந்நிலையில் மருத்துவமனை நிர்வாக விதிகளின்படி கட்டட பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்ற 2022 ஜூலை வரை அவகாசம் அளித்து குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:கடந்த ஆண்டு இந்த அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக குஜராத் அரசு மருத்துவமனைகளுக்கு கால அவகாசம் அளித்துள்ளது. நோயாளிகளுக்கு கருணையுடன் சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவமனைகள் பணம் காய்ச்சி இயந்திரங்களாக மாறிவிட்டன.

அவை மனித நேயத்தை மறந்து ரியல் எஸ்டேட் தொழில் போல ஆகிவிட்டன. ஒரு குடியிருப்பில் இரண்டு அல்லது மூன்று அறைகளை 'நர்சிங் ஹோம்' ஆக மாற்றி விடுகின்றனர். அங்கு தீ தடுப்பு சாதனம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இருப்பதில்லை. இத்தகைய சூழலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அமர்வு பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக பிறப்பித்த ஆணையை குஜராத் அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். அத்துடன் ஆணை பிறப்பித்த காரணத்தை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கு இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூலை-202119:36:04 IST Report Abuse
அ.கோமதிநாயகம் அரசியல், அரசு பணி, மருத்துவம், கல்வி சேவை பணியாக தொடங்கி,வணிகமாக மாறி இன்று கொள்ளை தொழில்களாக பீடு நடை போடுகிறது
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
20-ஜூலை-202118:51:17 IST Report Abuse
Sivagiri தனியார் மெடிக்கல் இன்சூரன்ஸ் . , மாஸ் மெடிக்கல் டொனேஷன் கலெக்சன் - உறுப்பு தானம் மற்றும் மாற்று சிகிச்சை - சிசேரியன் etc-etc- இவை போல யாராலும் கேள்வி கேட்க முடியாத , தடுக்க முடியாத எந்த ஒரு வரைமுறைக்கும் , சட்ட திட்டத்துக்கும் கட்டுப் படாத - - ஒரு மெகா மெடிக்கல் மாபியா கொள்ளை கூட்டணி - . , கொரானா என்று தனியார் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்த்தால் - பணத்தை கொடுத்து விட்டு அப்டியே போயி விட வேண்டியதுதான் - திரும்பி வந்தால் அதிர்ஷ்டம் ., இல்லை என்றால் மெஸேஜ் மட்டும் வரும் - யாராலும் கேள்வி கேட்க முடியுமா ? . .
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
20-ஜூலை-202118:42:33 IST Report Abuse
Sivagiri இப்படித்தான் பாபாராம்தேவ் சொன்னாரு - ஆனா அவருக்கு தண்டனை கொடுக்க போறீங்க . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X