கொங்கு செட்டியார் சங்க நிர்வாகிகள் தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொங்கு செட்டியார் சங்க நிர்வாகிகள் தேர்வு

Added : ஜூலை 20, 2021
Share
அன்னுார்:கொங்கு செட்டியார் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கடந்த பிப்.,ல், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான, 20 சதவீத கல்வி, வேலைவாய்ப்பிலான இட ஒதுக்கீட்டில், 10.5 சதவீதம் வன்னியருக்கும், 7 சதவீதம் சீர்மரபினருக்கும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள 20 சமூகங்களுக்கும் சேர்ந்து வெறும் 2.5 சதவீதம் ஒதுக்கீடு மட்டுமே கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்த
 கொங்கு செட்டியார் சங்க  நிர்வாகிகள் தேர்வு

அன்னுார்:கொங்கு செட்டியார் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கடந்த பிப்.,ல், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான, 20 சதவீத கல்வி, வேலைவாய்ப்பிலான இட ஒதுக்கீட்டில், 10.5 சதவீதம் வன்னியருக்கும், 7 சதவீதம் சீர்மரபினருக்கும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள 20 சமூகங்களுக்கும் சேர்ந்து வெறும் 2.5 சதவீதம் ஒதுக்கீடு மட்டுமே கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்த புதிய சட்டத்தால் பாதிக்கப்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த கொங்கு செட்டியார் சமூகத்தினர், கொங்கு செட்டியார்கள் முன்னேற்ற சங்கத்தை துவக்கியுள்ளனர்.அன்னுாரில் நடந்த நிகழ்ச்சியில், தலைவராக நடராஜன், செயலாளராக ராஜேந்திரன், பொருளாளராக ஆனந்தஜோதி தேர்வு செய்யப்பட்டனர். பத்து உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக் கமிட்டியும் அமைக்கப்பட்டது. தொடர்ந்து மிகவும் பிற்பட்டோர் பட்டியலில், முன்பிருந்த நிலையை கொண்டுவர சட்ட ரீதியாகவும், அரசிடமும் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X