பொது செய்தி

தமிழ்நாடு

3வது குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்கணும்!முன்னாள் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:''கோவை மாநகராட்சி மூன்றாவது குடிநீர் திட்டத்தை, தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும்" என, முன்னாள் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.கோவை மாநகராட்சியின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கு, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் இருந்து, தண்ணீர் எடுக்கும், பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம், 740 கோடி ரூபாய்
 3வது குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்கணும்!முன்னாள் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்

மேட்டுப்பாளையம்:''கோவை மாநகராட்சி மூன்றாவது குடிநீர் திட்டத்தை, தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும்" என, முன்னாள் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.கோவை மாநகராட்சியின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கு, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் இருந்து, தண்ணீர் எடுக்கும், பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம், 740 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. நீரேற்று நிலையம், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், சுரங்கப் பாதை அமைத்தல் என, திட்டப் பணிகள், மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது தண்டிகைபெருமாள்புரத்தில், சுத்திகரிப்பு நிலையம், கட்டாஞ்சி மலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.மலையில், 900 மீட்டருக்கு சுரங்கப்பாதை அமைப்பதில், தற்போது, 140 மீட்டர் வரை சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று, 91 கி. மீட்டருக்கு குடிநீர் பிரதான குழாய் பதிக்கப்பட உள்ளது. 73 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சமநிலை தொட்டிகள், ஏழு இடங்களில் கட்டப்பட்டுள்ளன.மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றின் கரையில், 134 கோடியே, 40 லட்சம் செலவில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நேற்று அதிகாலை, பூமி பூஜை நடந்தது. காலை, 10:30 மணிக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், அருண்குமார், அர்ஜூனன், ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியதாவது:கோவை மாவட்டத்தில் எண்ணற்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பல பணிகள் நடந்து முடிந்துள்ளன. சில பணிகள் நடந்து வருகின்றன. நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் ஆரம்பிக்கப்படாமல் இருந்தது. அதில், கோவை மாநகராட்சி மூன்றாவது குடிநீர் திட்ட நீரேற்று நிலையமும் ஒன்று. இப்பணிக்கு, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி பவானி ஆற்றின் கரையோரம் நடந்தது. 2035ம் ஆண்டு மக்கள்தொகை ஏற்ப, இத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் குடிநீர் பிரச்னை இருக்காது.கோவை மாநகராட்சி பகுதியில், 96 பணிகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் எந்த பாகுபாடும் இல்லாமல், பணியாற்றுவேன் என கூறியுள்ளார். அது உண்மை என்றால், ரத்து செய்த பணிகளை, மீண்டும் துவக்க வேண்டும். கோவை மாநகராட்சியின் மூன்றாவது குடிநீர் திட்ட பணிகளை, விரைந்து மேற்கொண்டு முடிக்க வேண்டும். மத்திய அரசு, தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி அதிகம் வழங்க வேண்டும். அதை, அனைவருக்கும் தடுப்பூசி போட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ரவீந்திரன், கண்காணிப்பு பொறியாளர் ரகுபதி, நிர்வாக பொறியாளர் விவேகானந்தன், உதவி நிர்வாக பொறியாளர் விஜயலட்சுமி உட்பட குடிநீர் திட்ட வடிகால் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X