பொது செய்தி

தமிழ்நாடு

வாங்க... காத்திருக்கோம் நாங்க...! ஆனைகட்டியில் ஆசிரியர்கள் அபாரம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:ஆனைகட்டியில் பள்ளிக்கு வரும் பழங்குடியின மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பாடங்களை கற்றுத்தரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவிட் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படவில்லை. முதல் தொற்று ஒய்ந்த பின், ஆசிரியர்கள் பலர், மாணவர்கள் அதிகம் வசிக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று பாடங்களை நடத்தினர். மேலும், ஆன்லைன் வாயிலாக பாடங்கள்
 வாங்க... காத்திருக்கோம் நாங்க...! ஆனைகட்டியில் ஆசிரியர்கள் அபாரம்

பெ.நா.பாளையம்:ஆனைகட்டியில் பள்ளிக்கு வரும் பழங்குடியின மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பாடங்களை கற்றுத்தரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவிட் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படவில்லை. முதல் தொற்று ஒய்ந்த பின், ஆசிரியர்கள் பலர், மாணவர்கள் அதிகம் வசிக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று பாடங்களை நடத்தினர். மேலும், ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன. கோவில் தொற்றின் இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு சென்று, மாணவர் சேர்க்கை மற்றும் மாணவ, மாணவியருக்கு இலவச புத்தகங்கள் வழங்குதல் உட்பட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், எண்.24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைகட்டி வட்டாரத்தில், கொண்டனுார் மற்றும் பனப்பள்ளி மலைக்கிராமங்களில் அரசு பள்ளிகளை தேடி வரும் மாணவ, மாணவியருக்கு, பாடங்களை சொல்லிக் கொடுக்கும் பணியில், ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.ஆசிரியர்கள் கூறியதாவது:இப்பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இது மலைச்சார்ந்த பகுதி என்பதால் இணையதள இணைப்பு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த, பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பாடங்கள் கற்றுக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கோவிட் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு வருகிறோம். பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பாடங்களை கற்றுக் கொள்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X