பொது செய்தி

தமிழ்நாடு

அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி.,க்கான இடம் மத்திய அரசின் நிலையை தெரிவிக்க உத்தரவு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை : மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீடு வழங்கும் முறை குறித்த, மத்திய அரசின் நிலையை தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, சென்னை உயர்

சென்னை : மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீடு வழங்கும் முறை குறித்த, மத்திய அரசின் நிலையை தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை, அப்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு விசாரித்தது.அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க, மத்திய,மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து, 2021 - 22 முதல் அமல்படுத்த உத்தரவிட்டது.

இந்த உத்தரவு, 2020 ஜூலையில் பிறப்பிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, குழு அமைக்கப்பட்டு அறிக்கை அளித்தது.ஆனால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை காரணம் காட்டி, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., தரப்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.

தி.மு.க., சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த, குழு பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் சம்பந்தம் இல்லை. ''எனவே, இது நீதிமன்ற அவமதிப்பு. உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தினால், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 600 இடங்கள் வரை கிடைக்கும்,'' என்றார்.இதையடுத்து, மத்திய அரசு வழக்கறிஞரை பார்த்து, 'உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். எப்படி அமல்படுத்த போகிறீர்கள்' என, தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், வழக்கறிஞர் வி.சந்திரசேகரன் ஆஜராகி, ''இட ஒதுக்கீடு, 50 சதவீதம் என, வரம்பு உள்ளது. பதில் மனு தாக்கல் செய்கிறோம். நீதிமன்ற அவமதிப்பு செய்யவில்லை,'' என்றனர்.தமிழக அரசு சார்பில், வழக்கறிஞர் முத்துக்குமார் ஆஜராகி, ''69 சதவீத ஒதுக்கீட்டை பின்பற்றும்படி, மாநில அரசு சார்பில் குழுவிடம் மனு அளிக்கப்பட்டது,'' என்றார்.அதைத் தொடர்ந்து, அகில இந்திய ஒதுக்கீட்டில், 2021 - 22ம் கல்வியாண்டில், மாநில சட்டப்படி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டை அமல்படுத்தும் முறை மற்றும் விதம் குறித்து, மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, முதல் பெஞ்ச்உத்தரவிட்டது.விசாரணையை, 26ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X