சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை மிரட்டல்: நடிகர் கதறல்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை, : 'கொலை மிரட்டல் விடுப்போர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் நடிகர் ராஜேந்திரநாத் புகார் அளித்துள்ளார். சென்னை, சூளைமேடு பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரநாத்; நடிகர் மற்றும் தே.மு.தி.க., நிர்வாகியான இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்:என் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல். அங்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்,

சென்னை, : 'கொலை மிரட்டல் விடுப்போர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் நடிகர் ராஜேந்திரநாத் புகார் அளித்துள்ளார்.

சென்னை, சூளைமேடு பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரநாத்; நடிகர் மற்றும் தே.மு.தி.க., நிர்வாகியான இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்:என் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல். அங்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், ஸ்ரீமுத்துமாலை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பெயரை பயன்படுத்தி, சில நபர்கள் பண மோசடி மற்றும் பஞ்சலோக சிலைகள், கோவில் நிலம் அபகரிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்நிலையில், எங்கள் ஊரைச் சேர்ந்த ராஜா, கிரிதரன் உள்ளிட்ட நான்கு பேர், எனக்கும், என் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதுடன், 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், அவதுாறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X