சர்ச்சை போஸ்டர் வழக்கு: உச்ச நீதிமன்றம் மறுப்பு

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுடில்லி : பிரதமர் மோடியை விமர்சித்து 'போஸ்டர்' ஒட்டுவோர் மீதான கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. டில்லியைச் சேர்ந்த பிரதீப் குமார் யாதவ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:டில்லி உத்தர பிரதேசம் மத்திய பிரதேசம் மற்றும் லட்சத் தீவுகளில் பிரதமர் மோடியின் தடுப்பூசி கொள்கையை விமர்சித்து போஸ்டர்
 சர்ச்சை, போஸ்டர் வழக்கு  உச்ச நீதிமன்றம், மறுப்பு

புதுடில்லி : பிரதமர் மோடியை விமர்சித்து 'போஸ்டர்' ஒட்டுவோர் மீதான கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த பிரதீப் குமார் யாதவ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:டில்லி உத்தர பிரதேசம் மத்திய பிரதேசம் மற்றும் லட்சத் தீவுகளில் பிரதமர் மோடியின் தடுப்பூசி கொள்கையை விமர்சித்து போஸ்டர் ஒட்டியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கை அரசியல் சாசனம் வழங்கியுள்ள பேச்சுரிமையை பறிப்பதாக உள்ளது. சமூக ஊடகங்களில் மருத்துவ உதவி கோருவோர் மீது கிரிமினல் வழக்கு பதியக் கூடாது என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை மீறி டில்லியில் அரசின் தடுப்பூசி கொள்கையை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே அரசை விமர்சித்து போஸ்டர் ஒட்டுவோரை போலீசார் கைது செய்வதற்கும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:நாங்களும் நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளை படிக்கிறோம்; லட்சத்தீவு விவகாரம் வேறு.

சர்ச்சைக்குரிய பெண்ணுக்கு கேரள உயர் நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியுள்ளது. அந்த சர்ச்சையை இந்த வழக்கில் சேர்க்க வேண்டாம். டில்லி மற்றும் இதர பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளீர்கள்.எங்கெங்கு எத்தனை வழக்கு பதிவாகியுள்ளது என்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும். அனைத்து தகவல்களையும் சரிவர திரட்டிய பின் மனு தாக்கல் செய்ய வேண்டும்.மேலெழுந்தவாரியாக உங்கள் மனுவின் அடிப்படையில் போலீசார் கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது. விசாரணை அடுத்த வாரம் தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X