கூட்டுறவு வங்கியில் ரூ.100 கோடி மோசடி

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருச்சூர், : கேரளாவின் திருச்சூரில்உள்ள கூட்டுறவு வங்கியில் 100 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்துள்ளது.திருச்சூரில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூ. தரப்பில் 13 உறுப்பினர் குழு கட்டுப்பாட்டிலான கரவன்னுார் கூட்டுறவு வங்கியில் முறைகேடுகள் நடப்பதாக

திருச்சூர், : கேரளாவின் திருச்சூரில்உள்ள கூட்டுறவு வங்கியில் 100 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்துள்ளது.திருச்சூரில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூ. தரப்பில் 13 உறுப்பினர் குழு கட்டுப்பாட்டிலான கரவன்னுார் கூட்டுறவு வங்கியில் முறைகேடுகள் நடப்பதாக வாடிக்கை யாளர்கள்தொடர்ந்து புகார் அளித்தனர்.இதையடுத்து சமீபத்தில் வங்கி கணக்குகள் தீவிர ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. அப்போது வங்கியில் கணக்கு வைத்துள்ளோருக்கு தெரியாமல் அவர்கள் பெயரில் கடன் வழங்கப்பட்டு இருப்பதும் அதை வேறு கணக்குகளில் வரவு வைத்திருப்பதும் தெரிய வந்தது.

வங்கி தலைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் செயலர் மற்றும் அதிகாரிகள் என ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.முதற்கட்ட விசாரணையில் வங்கியில் 100 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ellar - New Delhi,இந்தியா
20-ஜூலை-202108:22:24 IST Report Abuse
ellar போயும் போயும் பீகாரையும் தமிழ் நாட்டையுமா நீங்க காப்பியடிப்பீங்க? மய்யம் நடிகர் சான்றிதழ் குடுத்ததும் உங்க நிலையில் தடுமாற்றமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X