பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்டெர்லைட்' ஆலையை மீண்டும் திறக்க கோரி மனு

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை,:'துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவும், ஆக்சிஜன் ஆலை தொடர்ந்து இயங்கவும் அனுமதி அளிக்க வேண்டும்' என, துாத்துக்குடி ஒப்பந்த தொழிலாளர் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம், சங்க நிர்வாகிகள் அளித்த மனு:துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, 2018 மே மாதம்
 'ஸ்டெர்லைட்' ஆலையை  மீண்டும் திறக்க கோரி மனு

சென்னை,:'துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவும், ஆக்சிஜன் ஆலை தொடர்ந்து இயங்கவும் அனுமதி அளிக்க வேண்டும்' என, துாத்துக்குடி ஒப்பந்த தொழிலாளர் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம், சங்க நிர்வாகிகள் அளித்த மனு:துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, 2018 மே மாதம் மூடப்பட்டது.

தமிழக மக்கள் நலன் காக்க, தமிழக அரசு ஒத்துழைப்புடன், ஸ்டெர்லைட் ஆலை இதுவரை, 1,882.74 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து, தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களுக்கு அனுப்பி உள்ளது.இதன் வழியே, ஒப்பந்த தொழிலாளர்கள், 300 பேருக்கு வேலை கிடைத்து, அவர்களின் வாழ்வாதாரம் சற்று உயர்ந்துள்ளது.கொரோனா தொற்று, மூன்றாம் அலை வாயிலாக பரவ தயாராகி வருகிறது. தமிழக மக்களின் உயிர் காக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்டெர்லைட் ஆக்சிஜன் ஆலை தொடர்ந்து இயங்க, தாங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

மக்களை கொரோனாவில் இருந்து காப்பது மட்டுமின்றி, 300 தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், இந்த ஆலையை நம்பி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு துவங்கினால், 1,000 தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உயர வழி வகுக்கும். எனவே, பராமரிப்பு ஆணை வழங்கவும், ஆலையை மீண்டும் திறக்கவும் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vns - Delhi,யூ.எஸ்.ஏ
20-ஜூலை-202123:47:17 IST Report Abuse
vns 'தொழிலாளர்களின் கோரிக்கை' பத்திரிகையில் வந்தாலே அதற்கு அரசியல் விளையாட்டு ஆரம்பம் என்று பொருள். பெரும்பான்மைக் கட்சித் தலைவருக்கு இதுபோன்ற 'கோரிக்கைகள்' அவருடைய 'மனமாற்றத்திற்கு' வழி வகுக்கும்.
Rate this:
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
20-ஜூலை-202115:51:51 IST Report Abuse
G  Mahalingam அடுத்த எந்த இடத்திலாவது காப்பர் ஆலை வந்தால் 15 கிமி சுற்றளவு உள்ள அத்தனை நிலத்தையும் அந்த ஆலையே வாங்கி வைத்து கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்த பெரிய தவறு அருகில் வீட்டை கட்ட அனுமதித்தது. ஆலை உருவான போது 10 கிமி தொலைவில் வீடுகளே இல்லை. இந்த திமுக அதிமுக புரோக்கர்கள் ஆலை அருகில் வீடு, ஆலை வேலை வாய்ப்பு என்று பிளாட் போட்டு விற்றுள்ளனர்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
20-ஜூலை-202113:29:12 IST Report Abuse
r.sundaram ஆலையில் சுமார் இரண்டாயிரம் பேர் வேலை பார்த்ததாக வெளியான தகவல்கள் சொல்கின்றன. ஆலையை மூடும் முன் அவர்களிடம் தகவல் கேட்கவோ, அவர்களுக்கு வேறு வேலைகளுக்கு ஏற்பாடு செய்யவோ இல்லை. ஆலையை மூடிய பின் தற்போது அங்கு காற்று மாசுபாடு குறைந்து விட்டதா என்ன? இதையெல்லாம் யார் கவனித்தார்கள்? ஆலையை திரும்பவும் திறந்தால் இரண்டாயிரம் குடும்பங்கள் பிழைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X