அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வுக்கு காங்., - இ.பி.எஸ்.,சே காரணம் ; அமைச்சர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
சென்னை : ''தமிழகத்தில், 'நீட்' தேர்வு நடைபெறுவதற்கு, காங்கிரஸ் மற்றும் இ.பி.எஸ்., தான் காரணம்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, முழு கவச உடை அணிந்து, கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.பின்னர் அவர்

சென்னை : ''தமிழகத்தில், 'நீட்' தேர்வு நடைபெறுவதற்கு, காங்கிரஸ் மற்றும் இ.பி.எஸ்., தான் காரணம்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.latest tamil newsசென்னை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, முழு கவச உடை அணிந்து, கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் போது, தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததை தொடர்ந்து, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கூடுதலாக, 100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டன. மேலும், ஆக்சிஜன் ஆலை அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய பொதுப்பணித்துறை ஒருங்கிணைந்து, 70 இடங்களிலும், சமூக பொறுப்பு நிதியின் கீழ், 40 இடங்கள் என, மொத்தம் 110 அரசு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் ஆலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில், 20 இடங்களில் பணிகள் முடிந்துள்ளன. இவை, மூன்றாம் அலையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை. தமிழகத்தில் கொரோனா தொற்று முழுவதுமாக முடியவில்லை. நேற்று முன்தினம், 2,079 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறைவான எண்ணிக்கை இல்லை. மூன்றாவது அலை வரும் என, தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.


latest tamil newsஎனவே, பொதுமக்கள் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து, இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்து 32 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. இதில், 3.42 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து, தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.நீட் விவகாரத்தில், தமிழகத்தை ஏமாற்றியது யார் என்பது மக்களுக்கு தெரியும். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான், தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதும், நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. அதன்பின், ஆட்சிக்கு வந்த இ.பி.எஸ்., தான், இந்த புண்ணியத்தை கட்டிக் கொண்டார். நான்கு ஆண்டுகளாக, தமிழகத்துக்கு நீட் தேர்வு வர உதவி செய்தவர் இ.பி.எஸ்., தான். இந்த தேர்வு காரணமாக, 13 பேர் இறந்துள்ளனர்.கிராமப்புற மாணவர்களுக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, தி.மு.க., கோரிக்கை வைத்தது. அப்போது தான், வேறு வழியில்லாமல் 7.5 சதவீதத்துக்கு சம்மதித்தனர். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, மருத்துவ ஊரக பணிகள் இயக்குனர் குருநாதன், இ.எஸ்.ஐ., மருத்துவமனை முதல்வர் சவுமியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
20-ஜூலை-202117:40:54 IST Report Abuse
கல்யாணராமன் சு. சென்ற வருடம் அக்டோபர் மாதம் வந்த ஒரு அறிக்கையின்படி, 2019 ஆம் வருடம் தமிழ்நாட்டில் 13,493 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் ..........914 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் ,,,,,,, 200 அரசு ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் ........... குடும்ப தகராறில் 43 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் ......... மாண்புமிகு மாசுவின் கணக்குப்படி, இந்த 914 மாணவர்களில், 13 பேர் நீட்டினால் இறந்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும், மீதி 901 மாணவர்கள் எதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் ? காதல் தோல்வியாலா ? படிப்பு விஷயத்தாலா ?? அரசு ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் ?? லஞ்சம் வாங்கமுடியாததாலா ? இல்லை வாங்கி மாட்டிக்கொண்டதாலா ?? இல்லை, கட்டுமரம் காலத்தில், திருச்செந்தூர் கோவிலில் பதவி வகித்த சுப்ரமணியம் என்பவரை "போன்றா" ?? சரி, மாசு படியாத மாசு சொன்னதை உண்மை என்றே வைத்துக்கொள்வோம் ........ 13 பேருக்காக நீட்டை ஒழியுங்கள், 901 பேருக்காக பள்ளிகளையும், பரிட்சைகளையும் ஒழியுங்கள் ........ பள்ளிகளில் காதல் செய்வதை சட்டமாகுங்கள் ..........200 பேருக்காக அரசு பதவிகளை ஒழியுங்கள், இல்லை வேலை செய்யவேண்டாம் சம்பளம் மட்டும் மாதா மாதம் வந்துவிடும் என்று உறுதி மொழி அளியுங்கள் (தேர்தலுக்கு அப்பறமும் வாக்குறுதி கொடுக்கலாம் ... செய்யாததுக்கு எப்போ வேணுமானாலும் தரலாம் ). குடும்பம் இருக்கிறதனாலேதான் குடும்ப சண்டை வந்து 43 பேர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க ? குடும்பங்களே இருக்க கூடாதுன்னு சொல்லிடுங்க ............
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
20-ஜூலை-202114:39:38 IST Report Abuse
raja அப்புறம் ஏன்யா நீட்டுக்கு காரணமான காங்கிரஸோட கூட்டணி வைத்து இருப்பது சீட்டு கொடுத்து பதினாறு ஜெயிக்க வச்சிங்கன்னு தன்மான தமிழன் கேட்கமாட்டான் என்கிற நம்பிக்கையில் நீங்க சொல்றீங்க தலைவா மாசு....தமிழன பத்தி புரிஞ்சிகிட்ட ஒரே கட்சி விடியல் தர்ற கட்சிதான்....
Rate this:
Cancel
மதுரை வாசு - மதுரை மாநகர்,இந்தியா
20-ஜூலை-202113:17:05 IST Report Abuse
மதுரை வாசு நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான், தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சி 2011லேயே போயிருச்சு. நீட் வந்தது 2013ல். பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லணும் அமைச்சரே கொடுமை
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
20-ஜூலை-202122:44:02 IST Report Abuse
madhavan rajan2011 ல மாநிலத்தில் போச்சு. நீட் தேர்வு கொண்டுவந்தது மத்திய அரசு. அதில் 2014 வரை அங்கம் வகித்தது திமுக. மத்தியில் அந்த சட்டம் வந்தபோது திமுக எதிர்த்து வாக்களித்ததா? அல்லது நமது மாநிலத்துக்கு விலக்கு வேண்டும் என்று கேட்டதா? இதற்கெல்லாம் மதுரை வாசுவிடம் பதில் இருக்கிறதா? இல்லையென்றால் அவர் பொய் சொல்கிறார் என்று பொருள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X