அரசியல் செய்தி

தமிழ்நாடு

குண்டுவெடிப்பு குறைந்துள்ளது: அண்ணாமலை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சேலம் : ''பா.ஜ., ஆட்சியில் கலவரம், குண்டுவெடிப்பு, மத மோதல் குறைந்துள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.சேலத்தில் நேற்று ஆடிட்டர் ரமேஷ் நினைவு தின நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்திய பின், அவர் அளித்த பேட்டி:இயக்கத்துக்கு பாடுபட்ட ஒரே குற்றத்துக்காக ரமேஷ் கொல்லப்பட்டார். இதில் ஈடுபட்ட சமூகவிரோத கும்பலுக்கு தண்டனை பெற்று தர, மாநில அரசுக்கு கோரிக்கை

சேலம் : ''பா.ஜ., ஆட்சியில் கலவரம், குண்டுவெடிப்பு, மத மோதல் குறைந்துள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

சேலத்தில் நேற்று ஆடிட்டர் ரமேஷ் நினைவு தின நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்திய பின், அவர் அளித்த பேட்டி:இயக்கத்துக்கு பாடுபட்ட ஒரே குற்றத்துக்காக ரமேஷ் கொல்லப்பட்டார். இதில் ஈடுபட்ட சமூகவிரோத கும்பலுக்கு தண்டனை பெற்று தர, மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். கால அவகாசம்மத்திய சட்டத்துறை அமைச்சரை சந்தித்து, விரைவாக வழக்கு விசாரணையை துவங்க வலியுறுத்துவோம்.டிசம்பருக்குள் 135 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்து, மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநில சுகாதார அமைச்சரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

தமிழக அரசு ஆட்சியமைத்து, ஆறு மாதங்கள் கால அவகாசம் தர வேண்டும். அதனால் விமர்சனங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. தவறு செய்தால், ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக தட்டிக் கேட்போம்.பா.ஜ., ஜாதி, மதத்தை அடையாளப்படுத்தி, ஓட்டு வங்கியாக பயன்படுத்தியதில்லை. காங்., தான் முஸ்லிம்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தினர். அவர்கள் ஆட்சியின்போது, முஸ்லிம்களின் சமூக குறியீடு குறைவாக இருந்தது. பா.ஜ., ஆட்சியில் தற்போது அதிகரித்துள்ளது. கலவரம், குண்டுவெடிப்பு, மத மோதல் குறைந்துள்ளது.பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் குழப்பம் இல்லை. இதை, கட்சி தலைவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். சிலர், அவர்களது தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

மேகதாது அணை கட்டப்படக் கூடாது. அது, 65 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்கக் கூடியது. மழை வராதபோது, தமிழக விவசாயிகளுக்கு கஷ்டம். பா.ஜ., எதிர்ப்புபக்கத்து மாநிலத்தில், பா.ஜ., ஆட்சி இருந்தாலும் கூட, தமிழக விவசாயிகளுக்கு சரியாக இருக்காது என்பதால், தமிழக பா.ஜ., எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். இங்கிருந்து டில்லி சென்ற குழுவில் இடம்பெற்று, தமிழக பா.ஜ., கருத்தை வலியுறுத்திஉள்ளோம். பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது.

தி.மு.க., அரசு, 5 ரூபாய் குறைப்பேன் என்றது. இதுவரை குறைக்கவில்லை. விலையேற்றத்தில் மேலும், 1.20 ரூபாய் தமிழக அரசின் லாபம் அதிகரித்துள்ளது. நியாயமாக, 6.20 ரூபாய் குறைக்க வேண்டும். நிதியமைச்சரை கேட்டால் காலம், நேரம் குறித்து பேசுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X