ஜெப் பெசாஸின் விண்வெளி ராக்கெட் : வடிவமைத்த குழுவில் இந்திய பெண்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மும்பை : 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசாஸின் விண்வெளி சுற்றுலா திட்டத்துக்கான ராக்கெட்டை வடிவமைத்த குழுவில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் பொறியாளர் இடம் பெற்றுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்டு பிரான்சன் தன் 'விர்ஜின் கேலடிக்' குழுவினருடன் விண்வெளி சுற்றுலா பயணத்தை சமீபத்தில் வெற்றிகரமாக முடித்து திரும்பினார்.அமேசான் நிறுவனரான

மும்பை : 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசாஸின் விண்வெளி சுற்றுலா திட்டத்துக்கான ராக்கெட்டை வடிவமைத்த குழுவில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் பொறியாளர் இடம் பெற்றுள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்டு பிரான்சன் தன் 'விர்ஜின் கேலடிக்' குழுவினருடன் விண்வெளி சுற்றுலா பயணத்தை சமீபத்தில் வெற்றிகரமாக முடித்து திரும்பினார்.அமேசான் நிறுவனரான ஜெப் பெசாஸ் விண்வெளி சுற்றுலா பயண திட்டத்திற்காக 'புளூ ஆரிஜின்' என்ற நிறுவனத்தை துவக்கினார்.இந்த நிறுவனத்தைச் சேர்ந்த விண்வெளி பொறியாளர்கள் 'நியூ ஷெப்பர்டு' என்ற ராக்கெட்டை தயாரித்து உள்ளனர்.இதில் ஜெப் பெசாஸ் மற்றும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேர் விண்வெளிக்கு இன்று பயணிக்கின்றனர்.

விண்வெளிக்கு பயணிக்கும் இந்த ராக்கெட்டை வடிவமைத்த புளூ ஆரிஜின் குழுவில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் பெண் பொறியாளர் சஞ்சல் கவாண்டே 30, இடம் பெற்றுள்ளார். இவரது தந்தை அசோக் கவாண்டே மும்பை அருகே உள்ள கல்யாண் - டோம்பிவிலி நகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவரது தாய் சுரேகா தொலை தொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

மும்பை பல்கலையில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த சஞ்சல் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலையில் மேற்படிப்பு படித்தார்.அமெரிக்காவிலேயே பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றினார். பைலட் பயிற்சி முடித்த பின் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான 'நாசா'வில் பணியில் சேர விண்ணப்பித்தார்.பல்வேறு காரணங்களால் அந்த பணி கிடைக்கவில்லை. இதையடுத்து ஜெப் பெசாஸின் புளூ ஆரிஜின் நிறுவனத்தில் 'சிஸ்டம் இன்ஜினியர்' பணியில் சேர்ந்து நியூ ஷெப்பர்டு ராக்கெட் வடிவமைப்பு குழுவில் இடம்பெற்றார். ''ராக்கெட் வடிவமைக்க வேண்டும் என்ற என் சிறு வயது கனவு நனவாகி இருப்பதில் மகிழ்ச்சி'' என சஞ்சல் கவாண்டேதெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X