பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் வளர்ச்சி இயக்குனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமனம்

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனரான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சரவணனுக்கு, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் பதவி, முழு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது, இதுவே முதல்முறை.இது குறித்து, துறையினர் கூறியதாவது:தமிழ் வளர்ச்சித் துறை, ஒரு மொழியியல் ஆய்வு சார்ந்த துறை. இந்த துறையில், துணை இயக்குனர், உதவி

சென்னை : ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனரான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சரவணனுக்கு, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் பதவி, முழு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது, இதுவே முதல்முறை.இது குறித்து, துறையினர் கூறியதாவது:தமிழ் வளர்ச்சித் துறை, ஒரு மொழியியல் ஆய்வு சார்ந்த துறை. இந்த துறையில், துணை இயக்குனர், உதவி இயக்குனராக பதவி வகிப்போர், பதவி உயர்வு பெற்று இயக்குனராக பதவி ஏற்பர். இல்லாவிட்டால், தமிழில், முதுகலை உள்ளிட்ட பட்டங்கள் பெற்ற, தமிழ் ஆய்வில் சிறப்புத் தன்மை பெற்ற தமிழறிஞர்கள் நியமிக்கப்படுவதும் உண்டு.இந்த விதிமுறைகளுக்கு மாறாக, முதன் முறையாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே, இயக்குனராக இருந்த விஜயராகவனுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
20-ஜூலை-202114:34:00 IST Report Abuse
vpurushothaman ஓம் சரவண பவாய நமஹ. தமிழ் வளர்ச்சி சிறப்புற வாழ்த்துகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X