சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் தொல்லை தாங்க முடியல: 'அரிவாள்' வீரலட்சுமி போலீசில் புகார்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை : 'சமூக வலைதளம் வாயிலாக, தனக்கு பாலியல் தொல்லை தரும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார். சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் வீரலட்சுமி; தமிழர் முன்னேற்றப்படை என்ற கட்சியை நடத்தி வருகிறார்.'வீடியோ' சர்ச்சை இவருக்கு, மர்ம நபர்கள், 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக, ஆபாச வீடியோக்கள் அனுப்புவது,

சென்னை : 'சமூக வலைதளம் வாயிலாக, தனக்கு பாலியல் தொல்லை தரும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.

சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் வீரலட்சுமி; தமிழர் முன்னேற்றப்படை என்ற கட்சியை நடத்தி வருகிறார்.'வீடியோ' சர்ச்சை இவருக்கு, மர்ம நபர்கள், 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக, ஆபாச வீடியோக்கள் அனுப்புவது, 'வீடியோ காலில்' நிர்வாணமாக பேசுவது என, பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக கூறப்படுகிறது.இது குறித்து, போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.அதனால், சில தினங்களுக்கு முன், வீரலட்சுமி அரிவாளுடன், தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருபவர்களின் பெயரை சொல்லி, அவர்களின், 'அதை' அறுத்து விடுகிறேன். அப்போதாவது நடவடிக்கை எடுப்பீர்களா என, கேள்வி எழுப்பி, 'வீடியோ' வெளியிட்டார். அது, சர்ச்சையை கிளப்பியது.

'டார்ச்சர்'இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வீரலட்சுமி நேற்று மீண்டும் அளித்துள்ள புகார்:சட்டசபை தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட, மார்ச், 21ல் வேட்பு மனு தாக்கல் செய்தேன். அன்றே மர்ம நபர்கள், என் மொபைல் போன் எண்ணிற்கு, ஆபாச வீடியோக்களை அனுப்பினர்.அதுபற்றி, பரங்கிமலை துணை கமிஷனரிடம் புகார் அளித்தேன்; நடவடிக்கை இல்லை.பின், செந்தமிழினி வீரலட்சுமி என்ற என், 'பேஸ்புக்' பக்கத்தில், 'மெசஞ்சர்' வாயிலாக, 40க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை அனுப்பினர். அதுபற்றி, ஜூன், 18ல், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன்.

ஜூலை, 15ல், முனி என்பவரின் 'பேஸ்புக்' பக்கத்தில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் படத்துடன், வீடியோ கால் அழைப்பு வந்தது. அதை ஏற்காமல் பல முறை தவிர்த்தேன். மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்ததால், 'டார்ச்சர்' தாங்க முடியாமல், அழைப்பை ஏற்றேன். எதிர்முனையில் பேசியவர், நிர்வாண நிலையில் இருந்தார். நேற்று முனி என்பவர், 'பேஸ்புக்'கில் என்னை விபசாரி என, குறிப்பிட்டு பதிவு வெளியிட்டுள்ளார்.

மன உளைச்சல் : இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.பின், வீரலட்சுமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அரிவாளுடன் வீடியோ வெளியிட்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ''அரிவாளை காட்டியது சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிபாடு தான் அது. நேர்மையான அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X