சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலைக்கு துாண்டினார்: 'மாஜி' அமைச்சர் மீது புகார்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை : 'பதவி வெறி காரணமாக, முன்னாள் அமைச்சர் அன்பழகன், தலைமை செயலகம் முன் என்னை தீக்குளிக்கச் சொல்லி, தற்கொலைக்கு துாண்டினார்' என, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஒருவர், போலீசில் புகார் அளித்துள்ளார். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டி தாலுகா, மோலையானுாரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:அ.தி.மு.க.,

சென்னை : 'பதவி வெறி காரணமாக, முன்னாள் அமைச்சர் அன்பழகன், தலைமை செயலகம் முன் என்னை தீக்குளிக்கச் சொல்லி, தற்கொலைக்கு துாண்டினார்' என, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஒருவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டி தாலுகா, மோலையானுாரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:அ.தி.மு.க., ஆட்சியில், உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பழனியப்பன் மற்றும் அவரது அண்ணன் மகன் வேலாயுதம் ஆகியோருக்கு, அரசு ஒப்பந்த பணியில் மோதல் ஏற்பட்டது.இந்த விவகாரத்தில், 2014ல், பழனியப்பன் செல்வாக்கில், என் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். பழனியப்பன் குறித்து, மறைந்த முதல்வர் ஜெ., வசித்த போயஸ் கார்டன் இல்லத்திற்கும் புகார் மனுக்கள் அனுப்பினேன்.

இதை அறிந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன், மொபைல் போன் வாயிலாக என்னை அழைத்தார். மூளைச்சலவைநாம் இருவரும் இணைந்து பழனியப்பனுக்கு எதிராக, கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு, முதல்வரின் தனிச்செயலர் மற்றும் போயஸ் கார்டனுக்கு புகார் அளிக்கலாம் என்றார். அதன்படி புகார் அளித்தோம். இது, பழனியப்பனுக்கு தெரிந்து விட்டது.அன்பழகனின் மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டது. ஆத்திரமடைந்த அன்பழகன், என்னை மூளைச்சலவை செய்து, பழனியப்பனுக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட செய்தார். நான் பெட்ரோல் எடுத்து வந்து கொடுத்து விடுகிறேன்.

'நீ பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் போது, கோட்டையில் முதல்வர் செல்லும் போது, பழனியப்பன் மீது நடவடிக்கை கோரி, தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டும்' என வலியுறுத்தினார்.அவ்வாறு செய்தால், அது ஜெ.,வின் கவனத்திற்கு செல்லும். அவர் பழனியப்பனின் பதவிகளை பறிப்பார். அதன் பின் மாவட்ட செயலர், அமைச்சர் எல்லாமும் நான் தான். உன் மீதான வழக்குகளை வாபஸ் பெற வைக்கிறேன். கடன் பிரச்னையை தீர்த்து வைக்கிறேன். மீண்டும் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் உட்கார வைக்கிறேன் என்று ஆசை காட்டினார்.

அதன்படி, அன்பழகன் ஏற்பாட்டில், கோட்டையில் பெட்ரோல் கொண்டு வந்து கொடுத்தனர். ஜெ., முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன். அப்போது, நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த என் மனைவியும், போலீசாரும் என்னை காப்பாற்றினர்.

நடவடிக்கை : இந்த சம்பவத்திற்கு பின், பழனியப்பனின் பதவி பறிக்கப்பட்டது. என்னிடமும் விசாரணை நடந்தது. பதவி வெறி காரணமாக, என்னை தற்கொலைக்கு துாண்டிய அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற விபரங்களை போலீசார் விசாரிக்கும் போது தெரிவிக்க உள்ளேன்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த புகார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அங்கு கிருஷ்ணமூர்த்தியிடம், நேற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X