சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மத்திய அரசை கண்டித்து, மேட்டுப்பாளையம், காரமடையில் மின்வாரிய தொழிலாளர் சங்கத்தினர், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மத்திய அரசு, பாராளுமன்றத்தில், மின்சார சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய இருப்பதை கண்டித்து, மேட்டுப்பாளையம், காரமடையில் மின்வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். காரமடை மின்வாரிய அலுவலகம் முன்
 மின்வாரிய ஊழியர்கள்  கண்டன ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம்:மத்திய அரசை கண்டித்து, மேட்டுப்பாளையம், காரமடையில் மின்வாரிய தொழிலாளர் சங்கத்தினர், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மத்திய அரசு, பாராளுமன்றத்தில், மின்சார சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய இருப்பதை கண்டித்து, மேட்டுப்பாளையம், காரமடையில் மின்வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். காரமடை மின்வாரிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கோவை வடக்கு மாவட்ட கணக்காயர் களத்தொழிலாளர் சங்கத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். பொறியாளர் ஐக்கிய சங்கத் தலைவர் ஈஸ்வரன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.* மேட்டுப்பாளையம் கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள, மின்வாரிய அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை வடக்கு மாவட்ட மின்வாரிய சம்மேளன தலைவர் சுகவனம் தலைமை வகித்தார். மின்வாரிய ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X