பொது செய்தி

தமிழ்நாடு

அதிக மகசூல் பெற தொழில்நுட்பம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
வழி காட்டும் வேளாண் துறையினர் பெ.நா.பாளையம், ஜூலை 20-'பயிறுவகை சாகுபடி தொழில்நுட்பங்கள் வாயிலாக, அதிக மகசூல் பெறலாம்' என, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறையினர் தகவல் தெரிவித்தனர்.பயிறு வகைகளில், புரதச்சத்தின் அளவு தானியங்களுடன் ஒப்பிடுகையில் 2 முதல், 3 மடங்கு அதிகம். பயிறு வகை பயிரிடுவதால், அவை காற்றில் உள்ள தழைச்சத்தினை கிரகித்து, வேர் முடிச்சுகளில், நிலை நிறுத்தி,

வழி காட்டும் வேளாண் துறையினர்

பெ.நா.பாளையம், ஜூலை 20-

'பயிறுவகை சாகுபடி தொழில்நுட்பங்கள் வாயிலாக, அதிக மகசூல் பெறலாம்' என, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறையினர் தகவல் தெரிவித்தனர்.பயிறு வகைகளில், புரதச்சத்தின் அளவு தானியங்களுடன் ஒப்பிடுகையில் 2 முதல், 3 மடங்கு அதிகம். பயிறு வகை பயிரிடுவதால், அவை காற்றில் உள்ள தழைச்சத்தினை கிரகித்து, வேர் முடிச்சுகளில், நிலை நிறுத்தி, மண்ணின் வளத்தை கூட்டுகிறது. தனி பயிராகவும், ஊடுபயிராகவும், வரப்பு பயிராகவும், உளுந்து, பாசிபயிறு, தட்டை, துவரை போன்றவற்றை பயிரிடலாம்.இது, கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது. தற்போது, கோவை மாவட்டத்தில் பயிறு வகை பயிர்கள் பரப்பை அதிகரிக்க, திருந்திய பயறுவகை சாகுபடி தொழில்நுட்ப முறையில், 100 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைய, தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை திட்டமிட்டுள்ளது.குறைந்த காலத்தில், அதிக மகசூல் தரக்கூடிய ரகங்களையும், பூச்சி மற்றும் நோய் தாங்கி வளரக்கூடிய உளுந்து, பாசிபயிறு, தட்டை, துவரை போன்ற விளைச்சல் தரும் ரகங்களையும் தேர்வு செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்ய, ஒரு எக்டேருக்கு தேவையான விதைகள், ரைசோபியம், 600 கிராம், பாஸ்போ பாக்டீரியா, 600 கிராமுடன், ஆரியா, அரிசி கஞ்சியுடன் நன்கு கலந்து, பின்விதைக்க வேண்டும்.ஒரு சதுர மீட்டருக்கு, 33 செடிகள் என்றளவில் பராமரித்தல் வேண்டும். தழை, மணி, சாம்பல் சத்து மற்றும் நுண்ணுாட்ட கலவை, ஜிப்சம் ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து, ஒரு எக்டேருக்கு ஒருங்கிணந்த முறையில் இட வேண்டும். பயிறு பூக்கும் தருணத்திலும், 15 நாள் கழித்தும், 2 சதவீத டி.ஏ.பி., கரைசலை நீரில் கலந்து, பயிரில் சீராக தெளிக்க வேண்டும். பல்சஸ் ஒண்டர், 2 கிலோவை, 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.நீரை சிக்கனப்படுத்தி, குறைந்த நீரில் அதிக பரப்பில் பயிர் செய்ய, தெளிப்பு நீர் பாசனம் அல்லது சொட்டு நீர் பாசனம் செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த முறையில் வெள்ளை ஈக்கள், அசுவினி, இலைப்பேன் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த, எக்டேருக்கு, இமிடகுள்ளோரியிட், 100 மி.லி., மருந்தை நீரில் கலந்து கலந்து தெளிக்க வேண்டும்.பச்சை காய் துளைப்பான், புள்ளி காய் துளைப்பான் புரோடினியா புழு போன்ற கடித்து மெல்லும் புழுக்களை கட்டுப்படுத்த, குளோரன்ட்ரானிலிப்ரோஸ், 150 மி.லி., தண்ணீரில் கலந்து ஒட்டுப்பசையுடன் கலந்து, பயிரில் சீராக தெளிக்க வேண்டும்.இத்தகைய தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்தால், பயிறுவகைகளில் அதிக மகசூல் பெறலாம் என, பெரியநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை அலுவலர்கள் மைதிலி, விஜயகோபால் ஆகியோர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X