பொது செய்தி

தமிழ்நாடு

கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனை கட்டுமானத்திற்கு மட்டும் ரூ.

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை : கிண்டி, அரசு பன்னோக்கு மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு மட்டும், 219 கோடி ரூபாய் தேவைப்படும் என தெரியவந்துள்ளது. சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஓமந்துாரார் தோட்ட வளாகத்தில், உயர் சிகிச்சைக்கான அரசு பன்னோக்கு மருத்துவமனை இயங்குகிறது. தி.மு.க., ஆட்சியில், சட்டசபைக்காக இந்த கட்டடம் கட்டப்பட்டது. 2011ல் பொறுப்பேற்ற அ.தி.மு.க., அரசு, இதை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியது.

சென்னை : கிண்டி, அரசு பன்னோக்கு மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு மட்டும், 219 கோடி ரூபாய் தேவைப்படும் என தெரியவந்துள்ளது.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஓமந்துாரார் தோட்ட வளாகத்தில், உயர் சிகிச்சைக்கான அரசு பன்னோக்கு மருத்துவமனை இயங்குகிறது. தி.மு.க., ஆட்சியில், சட்டசபைக்காக இந்த கட்டடம் கட்டப்பட்டது. 2011ல் பொறுப்பேற்ற அ.தி.மு.க., அரசு, இதை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியது. இந்நிலையில், மத்திய சென்னையில், இதேபோன்று பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.

ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதற்காக 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.பொதுப்பணித் துறையின் மருத்துவப் பணிகள் பிரிவு வாயிலாக, இக்கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான, கட்டுமான வடிவமைப்பு, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணி, தற்போது முடிந்துள்ளது. கட்டுமானப் பணிக்கு மட்டும் 219 கோடி ரூபாய் செலவாகும் என, விரிவான திட்ட அறிக்கையில் தெரிந்துள்ளது.

மீதமுள்ள 31 கோடியில் மருத்துவமனை கட்டமைப்புக்குத் தேவையான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. அடிக்கல் நாட்டிய நாளில் இருந்து கட்டுமானப் பணிகளை 18 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X