கல்லுாரிகளில் சேர 26 முதல் விண்ணப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கல்லுாரிகளில் சேர 26 முதல் விண்ணப்பம்'

Added : ஜூலை 20, 2021
Share
சென்னை : ''தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லுாரி மற்றும் கலைக் கல்லுாரிகளில் சேர விரும்பும் மாணவர்கள், 26ம் தேதி முதல், 'ஆன்லைன்' வழியே விண்ணப்பிக்கலாம்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். திருவள்ளுவர் பல்கலையில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், தொடர்ந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில், அமைச்சர்

சென்னை : ''தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லுாரி மற்றும் கலைக் கல்லுாரிகளில் சேர விரும்பும் மாணவர்கள், 26ம் தேதி முதல், 'ஆன்லைன்' வழியே விண்ணப்பிக்கலாம்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

திருவள்ளுவர் பல்கலையில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், தொடர்ந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில், அமைச்சர் பொன்முடியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.அப்போது, பொன்முடி அளித்த பேட்டி: கவுரவ விரிவுரையாளர்கள், பணி மூப்பு மற்றும் யு.ஜி.சி., தகுதி அடிப்படையில் மதிப்பெண் வழங்கி, ஆசிரியர் தேர்வு வாரியம் அல்லது டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக விரிவுரையாளர்களாக தேர்வு செய்யப்படுவர். தற்போதுள்ள கவுரவ விரிவுரையாளர்கள், அவர்கள் பணியாற்றும் பல்கலையில் தொடரலாம். கடந்த ஆட்சியில், கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரம் செய்ய கமிட்டி போடப்பட்டது.

அது, பல்வேறு ஊழல்களுக்கு இடம் அளித்ததால், கமிட்டி கலைக்கப்பட்டது. தற்போது, கவுரவ விரிவுரையாளர்களுக்கு முறையாக தேர்வு நடத்தப்படும்.பிளஸ் 2 மதிப்பெண் விபரம் வெளியாகி உள்ளது. மாணவர்களுக்கு, 22ம் தேதி முறையாக அனுப்பி வைக்கப்பட உள்ளது. பொறியியல் கல்லுாரி மற்றும் கலைக் கல்லுாரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும் 26ம் தேதி முதல் வழங்கப்படும். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட மாணவர்களுக்கு, 31ம் தேதிக்குள் மதிப்பெண் வந்து விடும். எனவே, ஆக., 24 வரை கல்லுாரிகளில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X