லாரி மீது பஸ் மோதல்: பாக்.,கில் 30 பேர் பலி

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
லாகூர், : பாகிஸ்தானில் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் பக்ரீத் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் உட்பட 30 பேர் பலியாயினர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியோல்கோட் நகரில் இருந்து 70க்கும் மேற்பட்ட பயணியருடன் நேற்று காலை ஒரு பஸ் ராஜன்பூர் சென்றது. தொழிலாளர்கள் பலரும் பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்காக அந்த பஸ்சில் சொந்த ஊர் சென்று

லாகூர், : பாகிஸ்தானில் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் பக்ரீத் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் உட்பட 30 பேர் பலியாயினர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியோல்கோட் நகரில் இருந்து 70க்கும் மேற்பட்ட பயணியருடன் நேற்று காலை ஒரு பஸ் ராஜன்பூர் சென்றது. தொழிலாளர்கள் பலரும் பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்காக அந்த பஸ்சில் சொந்த ஊர் சென்று கொண்டிருந்தனர்.அவர்கள் சென்ற பஸ், தாரா காசி கான் மாவட்டத்தில் 'டிரெய்லர்' லாரி மீது மோதியது. சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியாயினர். படுகாயம் அடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 18 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது; 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.பஸ் டிரைவர் துாங்கியதால் விபத்து நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
20-ஜூலை-202104:54:48 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே வழக்கம்போல இதற்கும் ரா மற்றும் rss தான் காரணம் என்று அறிக்கை விடுவான் அவனுக்கும் சில உடன்பிறப்புகள் இந்தியாவின் தென்கோடியில் இருக்கிறது உடனே அவை எல்லாம் தெரிந்தது போல ஊடகங்களில் பொங்கி தீர்க்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X