பொது செய்தி

தமிழ்நாடு

'ஆபத்பாந்தவனுக்கு' விருது: விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்பூர்:'ஜீவன் ரக் ஷா' பதக்க விருதுக்கு, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம், என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் அறிக்கை:நீரில் முழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்து, விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கை ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு

திருப்பூர்:'ஜீவன் ரக் ஷா' பதக்க விருதுக்கு, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம், என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் அறிக்கை:நீரில் முழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்து, விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கை ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு 'ஜீவன் ரக் ஷா பதக்க விருது' வழங்கப் படுகிறது.மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை, துணிச்சலுடன் தைரியமாக போராடி மீட்பவர்களுக்கு 'சர்வோத்தம் ஜீவன்ரக் ஷா' பதக்கம் வழங்கப்படுகிறது.துணிச்சலுடன் தாமதமின்றி உடனடியாக செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு 'உத்தம் ஜீவன் ரக் ஷா பதக்கம்' வழங்கப்படுகிறது. இந்த விருது தகுதியுள்ளோருக்கு, விண்ணப்பங்கள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில், பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் வழங்கப்படுகிறது. ஆக., 6ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X