பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை மேடான ரோடு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்பூர் மாநகராட்சி, கொங்கு மெயின் ரோடு பகுதியிலிருந்து டி.எஸ்.ஆர். லே அவுட் சென்று சேரும் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் அண்மையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக குழி தோண்டிய போது அகற்றிய மண் ரோட்டின் மையத்தில் கொட்டப்பட்டது. இப்பணி நீண்ட நாளாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் அந்த மண் மேட்டின் மீது அப்பகுதியினர் குப்பை கழிவுகளை கொட்டத்

திருப்பூர் மாநகராட்சி, கொங்கு மெயின் ரோடு பகுதியிலிருந்து டி.எஸ்.ஆர். லே அவுட் சென்று சேரும் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் அண்மையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக குழி தோண்டிய போது அகற்றிய மண் ரோட்டின் மையத்தில் கொட்டப்பட்டது. இப்பணி நீண்ட நாளாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் அந்த மண் மேட்டின் மீது அப்பகுதியினர் குப்பை கழிவுகளை கொட்டத் துவங்கினர். அதன்பின் குழாய்கள் பதிப்பு முடிந்த பின்னும், மண் மேடு அகற்றப்படவில்லை. தொடர்ந்து அந்த இடத்தில் குப்பை சேர்ந்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதானல், வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர்.முக கவசம் வழங்கல்மா.கம்யூ., மூத்த தலைவர் சங்கரய்யா நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு, அவிநாசி ஒன்றிய மா.கம்யூ., சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பூண்டி, அம்மாபாளையம், வஞ்சிபாளையம், சவுடம்பிகாநகர், கவுண்டம்பாளையம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில், கட்சி கொடி ஏற்றப்பட்டு, மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் பணிபுரியும், 60 துாய்மை பணியாளர்களுக்கு நோய் தொற்று பாதுகாப்புக்கான முக கவசம் வழங்கப்பட்டது. மாவட்ட குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முட்புதரான 'ரவுண்டானா' (படம்)திருப்பூர் நொய்யல் கரையை ஒட்டி மின் மயானம் வழியாக ரோடு உள்ளது. இதில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் போக்குவரத்து ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இதில் புல்தரையும், பூச்செடிகளும் வளர்த்து பராமரிக்கும் வகையில் திட்டமிட்டு துவங்கப்பட்டது.இது முறையாக பராமரிக்கப்படாத நிலையில், ரவுண்டானா முழுவதும் முட்செடிகள் வளர்ந்து புதர் போல் மாறியுள்ளது. ரவுண்டாானாவுக்கு வெளியேயும் படர்ந்து விட்டது. இதனால் இவ்வழியாக வரும் வரும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். முட்புதர் வெட்டி, முறையாகப் பராமரிக்க வேண்டும்.---மண்புழு உரக்கூடம் 'வேஸ்ட்'பொங்கலுார் ஒன்றியத்தில், பல இடங்களில் மண்புழு உரம் தயாரிக்கும் அமைப்பு உருவாக்கப்பட்டது. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த மண்புழு உரக்கூடங்கள் பல ஊராட்சிகளில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. மண்புழு உரம் தயாரிக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவும், குப்பைப் பிரச்சினை அடியோடு தீர்ந்து விடும் என்பது போலவும் உள்ளது. மண்புழு உரம் தயாரிப்பதோ, அவற்றை விற்பனை செய்வதோ நடைபெறவில்லை. பொதுமக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.---மரத்தில் வடிந்த பால் (படம்)திருப்பூர் அருகே மரத்தில் பால் வடிந்ததால், பொதுமக்கள் பரவசமடைந்து, வழிபாடு நடத்தினர். திருப்பூர் ஒன்றியம், தொரவலுார் ஊராட்சி மூங்கில்பாளையம், முருங்கக்காட்டு தோட்டத்தில், கருப்பராயன் கோவில்களும், 150 வயதுள்ள புளியமரமும் உள்ளன. நேற்று மதியம், புளியமரத்தின் கிளையில் இருந்து திடீரென பால் வடிந்தது. குழாயில் இருந்து தண்ணீர் விழுவது போன்ற சத்தத்துடன், சில மணி நேரம் பால் வடிந்து, கருப்பராய சுவாமி சிலை அருகே விழுந்தது. தகவல் அறிந்த மக்கள் ஆர்வத்துடன் சென்று, சுவாமியை வழிபட்டு சென்றனர்.---மரத்தில் வடிந்த பால்.---காய்ச்சல்; உஷார் நடவடிக்கைகேரளாவில், 'ஸிகா' வைரஸ் பாதிப்பு அதிகளவில் தென்பட துவங்கியுள்ளது. இதனால், கேரளாவில் இருந்து தமிழகம் வர இ--பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது, கேரள மாநிலம் சென்றவர்கள், மீண்டும் திருப்பூர் வந்து, தங்களது தொழிலில் ஈடுபட துவங்கியுள்ளனர்.சுகாதார துறையினர் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு எங்கும் தென்படவில்லை. அந்த வைரஸை பரப்பும் கொசுவும் இல்லை. இதனால், அச்சப்ப்பட தேவையில்லை. கேரளாவில் இருந்து திருப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு வருவோர், எல்லையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்,' என்றனர்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X