'மங்கி பி வைரஸ்' எப்படி பரவுகிறது?

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
பீஜிங் : சீனாவில் ஒருவரை பலி வாங்கிய 'மங்கி பி வைரஸ்' கொரோனா வைரஸ் போல, மனிதருக்கு மனிதர் பரவும் வகையைச் சேர்ந்தது அல்ல என்ற ஆறுதலான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.கடந்த மார்ச்சில் சீனாவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் காய்ச்சல், தசை வலி உள்ளிட்ட பாதிப்பிற்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இரு மாதங்களில் இறந்தார். அவரது உமிழ் நீர், சளி,

பீஜிங் : சீனாவில் ஒருவரை பலி வாங்கிய 'மங்கி பி வைரஸ்' கொரோனா வைரஸ் போல, மனிதருக்கு மனிதர் பரவும் வகையைச் சேர்ந்தது அல்ல என்ற ஆறுதலான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

latest tamil news

கடந்த மார்ச்சில் சீனாவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் காய்ச்சல், தசை வலி உள்ளிட்ட பாதிப்பிற்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இரு மாதங்களில் இறந்தார். அவரது உமிழ் நீர், சளி, ரத்தம் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் வாயிலாக, குரங்கு மூலமாக பரவும் 'மங்கி பி வைரஸ்' பாதிப்பால் அவர் இறந்தது தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:குரங்கு ஒருவரை கடித்தாலோ அல்லது நகத்தால் கீறினாலோ, மங்கி பி வைரஸ் பரவும்.

குரங்கின் உமிழ்நீர், மலம், சிறுநீர் போன்றவற்றில் இந்த வைரஸ் காணப்படும்.இந்த வைரஸ் பாதித்த குரங்கும் நோய்வாய்ப்பட்டு இறந்து விடும். இது மனிதர்களுக்கு சுலபமாக பரவாது. விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் கால்நடை மருத்துவர்கள், ஆய்வக பணியாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மனிதருக்கு மனிதர் பரவுவதற்கும் வாய்ப்பில்லை. கடந்த 1932ல் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இதுவரை 50 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 21 பேர் தான் இறந்துள்ளனர்.

latest tamil news

கொரோனா போல மங்கி பி வைரசால் காய்ச்சல், தலைவலி, தசை வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். காயங்களில் சிறிய கொப்புளங்கள் உண்டாகும். வயிற்று வலி, மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகளும் காணப்படும். வைரஸ் பாதிப்பு அதிகரித்தால் மூளை, தண்டுவடம் ஆகியவற்றில் வீக்கம் ஏற்படும். தசை பிடிப்பு, நரம்புக் கோளாறு, மூளை செயலிழப்பு ஆகியவற்றை அடுத்து உயிரிழப்பு நேரிடும்.

குரங்கு கடித்தால் உடனே கடிபட்ட இடத்தை சோப்பு அல்லது அயோடின் கரைசலில் கழுவ வேண்டும். பின் 20 நிமிடங்கள்தொடர்ந்து தண்ணீர் ஊற்றிய பின், மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rupya -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூலை-202115:17:24 IST Report Abuse
rupya கோவிட் 19 ன் மூன்றாம் அலையால் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இறப்பதால் விமான போக்கு வரத்தை கனடா அரசு தடை செய்துவிட்டது.சவுதியும் டான்சானியாவும் முழுவதும் மூடப்பட்டு விட்டது. பிரேசில் 4200 பேர்கள் பலி. ஸ்பெயினில் எமர்ஜென்சி நீட்டிக்கப்பட்டுள்ளது. யுகேவும் பிரான்சும் ஒருமாதம் லாக்டவுனை அமல்படுத்தியுள்ளன. ஜெர்மனி நான்கு வாரங்களுக்கு ஊரை மூடி சீல் வைத்துள்ளது. இத்தாலி இன்று முழுக்க மூடப்பட்டுள்ளது. முதல் இரண்டு அலைகளை விட கோவிட்19 அதி தீவிரமாக உலகினை தாக்கி வருவதால் இந்தியர் வெளி நாட்டு போக்கு வரத்துகளில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இது ஆடி மாதம் என்பதால் தமிழ் நாடெங்கும் திருவிழாக்கள் நடக்கும். மக்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்வதும் கிராம மக்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை தருவதும் அவசியம்.
Rate this:
Cancel

Sampath Kumar - chennai,இந்தியா
20-ஜூலை-202108:20:40 IST Report Abuse
Sampath Kumar monkey virus indiavirku ????? chance illai kanna yaen entral ingu sangkkal ullathu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X