கலெக்டர் ஆபீசில் கொரோனா அபாயம்? தொலைபேசி வழி குறைகேட்புக்கு எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் ஆபீசில் கொரோனா அபாயம்? தொலைபேசி வழி குறைகேட்புக்கு எதிர்பார்ப்பு

Added : ஜூலை 20, 2021
Share
திருப்பூர்:கலெக்டர் அலுவலகத்துக்கு, அதிக மக்கள் வருவதை தவிர்க்க, தொலைபேசி வாயிலாக குறைகேட்பு கூட்டம் நடத்த, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், திங்கட்கிழமை தோறும் குறைகேட்பு கூட்டம் நடந்து வந்தது. ஊரடங்கால், நான்கு மாதங்களாக நடக்கவில்லை. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்னைகளை தெரிவிக்க, மனுக்கள் பெட்டி வைத்து, மனுக்கள்
 கலெக்டர் ஆபீசில் கொரோனா அபாயம்? தொலைபேசி வழி குறைகேட்புக்கு எதிர்பார்ப்பு

திருப்பூர்:கலெக்டர் அலுவலகத்துக்கு, அதிக மக்கள் வருவதை தவிர்க்க, தொலைபேசி வாயிலாக குறைகேட்பு கூட்டம் நடத்த, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், திங்கட்கிழமை தோறும் குறைகேட்பு கூட்டம் நடந்து வந்தது. ஊரடங்கால், நான்கு மாதங்களாக நடக்கவில்லை. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்னைகளை தெரிவிக்க, மனுக்கள் பெட்டி வைத்து, மனுக்கள் பெறப்படுகின்றன.ஊரடங்கு விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளதால், அதிக எண்ணிக்கையிலான மக்கள், கலெக்டர் அலுவலகம் வருகின்றனர். நேற்று, குறைகேட்பு கூட்டம் நடக்குமென நினைத்த, நுாற்றுக்கணக்கான மக்கள், வந்திருந்தனர்.கடந்த ஆண்டு, அரசு அதிகாரிகள், அலுவலர், பணியாளர் மற்றும் பொதுமக்களுக்கு, 'சானிடைசர்' வழங்கி, கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.இம்முறை, அதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. மக்கள் கூட்டம் அதிகம் வந்து கொண்டிருப்பதால், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கை அவசியமாகிறது. பொதுமக்கள், வீட்டில் இருந்து வெளியே வருவதை தவிர்க்கும் வகையில், கடந்த ஆண்டை போல், தொலைபேசி வாயிலாக, மக்கள் கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவிக்க வழிவகை செய்ய வேண்டும்.தன்னார்வலர்கள் சிலர் கூறியதாவது:நேரில் வந்து மனு கொடுத்தால், கோரிக்கை விரைவில் நிறைவேறும் என, மக்கள் நம்புகின்றனர். கொரோனா அபாயம் குறித்து சிந்திக்காமல், பல பகுதிகளில் இருந்து கலெக்டர் அலுவலகம் வருகின்றனர்.தொற்று பரவல் குறையாததால், மக்கள் கலெக்டர் அலுவலகம் வருவதை கட்டுப்படுத்த வேண்டும். கடந்த ஆண்டை போலவே, தொலைபேசி வாயிலாக, மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தி, தொற்று பரவாமல் தடுக்க, மாவட்ட நிர்வாகம் திட்டமிட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.நேரில் வந்து மனு கொடுத்தால்,கோரிக்கை விரைவில் நிறைவேறும்என, மக்கள் நம்புகின்றனர். கொரோனா அபாயம் குறித்து சிந்திக்காமல், பலபகுதிகளில் இருந்து கலெக்டர்அலுவலகம் வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X