நீக்கமற நிறைந்துவிட்ட லஞ்சம்... :நீக்க நினைக்கும் அதிகாரிகளுக்கோ பஞ்சம்

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மித்ராவை அழைத்து கொண்டு, கடை வீதிக்கு சென்ற சித்ரா, வழியிலிருந்த 'பங்க்'கில், வண்டிக்கு, பெட்ரோல் நிரப்பி, புறப்பட்டனர்.சற்றுத்தள்ளி, காங்., கட்சியினர் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்தனர். அதைப்பார்த்த சித்ரா, ''பெட்ரோல் விலை உயர்வை கண்டிச்சு, மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தோணும்னு, கட்சி தலைமையோட உத்தரவாம். ஆனா, பல இடங்களில
 நீக்கமற நிறைந்துவிட்ட லஞ்சம்... :நீக்க நினைக்கும் அதிகாரிகளுக்கோ பஞ்சம்

மித்ராவை அழைத்து கொண்டு, கடை வீதிக்கு சென்ற சித்ரா, வழியிலிருந்த 'பங்க்'கில், வண்டிக்கு, பெட்ரோல் நிரப்பி, புறப்பட்டனர்.சற்றுத்தள்ளி, காங்., கட்சியினர் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்தனர்.

அதைப்பார்த்த சித்ரா, ''பெட்ரோல் விலை உயர்வை கண்டிச்சு, மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தோணும்னு, கட்சி தலைமையோட உத்தரவாம். ஆனா, பல இடங்களில நிர்வாகிங்க இல்லாததால, மாவட்ட நிர்வாகிங்களே ஒவ்வொரு மண்டலமா போய், நடத்திட்டு இருக்காங்க,''

''இப்படியே போன, கட்சியை நடத்த ஆளே இருக்க மாட்டாங்க போல இருக்கே. அவங்க மாதிரி தான் தோழர்களும், ம.தி.மு.க.,வினரும், தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க. இதுல ஒரு விஷயம் என்னன்னா, சென்ட்ரல் கவர்மென்ட் மட்டும் தான் கண்டிக்கிறங்களே தவிர, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில சொன்ன, பெட்ரோலுக்கு, ஐந்து ரூபாய் விலை குறைப்பு, 100 ரூபாய் காஸ் மானியம் பத்தி, வாயே நீக்க மாட்டேங்கறாங்கன்னு, பொதுமக்கள் கேக்கறாங்க...'' என்றாள்.


ஆடிப்போன எம்.எல்.ஏ.,



''இல்லக்கா, இதைத்தான், 'கூட்டணி தர்மம்'னு சொல்வாங்க போல,'' என்ற மித்ரா, ''ஒரு வழியா, ரெண்டரை மாசம் கழிச்சு, லிங்கேஸ்வரர் ஊரு எம்.எல்.ஏ.,வா இருக்கற 'மாஜி' சபாநாயகர், தொகுதி பக்கம் தலைகாட்டிட்டு போயிட்டாராம்,'' என்றாள்.

''அடப்போடி, விவரம் தெரியாம பேசாதே. அவரு சூரிய கட்சியில இணைய போறார்ன்னு, யாரோ சிலர், சமூகவலை தளத்தில கொளுத்தி போட்டுட்டாங்க. 'அப்படியெல்லாம் இல்லை; நான் எப்போதும் இலைக்கட்சியின் விசுவாசி தான்'னு, விளக்கம் தர்றதுக்கு தான், வந்தாராம். ஆனா, ஓட்டுப்போட்ட மக்களுக்கு நன்றி கூட இன்னும் சொல்லலையாம்...''

''ஓஹோ, அதான் மேட்டரா?'' என்ற மித்ரா, ''அவிநாசியில இப்படின்னா, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., ஆபீஸ் 'சென்டிமென்ட்' வேற மாதிரிங்க்கா...'' என புதிர் போட்டாள்.

''அப்படி என்ன சென்டிமென்ட்?'' ஆர்வமாய் கேட்டாள் சித்ரா.

''அந்த தொகுதியோட முதல் எம்.எல்.ஏ.,வா ஜெயிச்ச கம்யூ., கட்சிக்காரர் அடுத்த தேர்தல்ல தோத்துட்டார். அதே மாதிரி அ.தி.மு.க., இந்த தடவ தோற்றது. இந்த 'சென்டிமென்ட்' க்கு பயந்து தான், இப்ப ஜெயிச்ச, சூரிய கட்சியோட எம்.எல்.ஏ., அந்த ஆபீஸ் பக்கம் போகாம இருக்காராம்...'' என்றாள் மித்ரா.

''சட்டம் ஒரு இருட்டறைன்னு சரியாத்தான் சொல்லியிருக்காங்க'' என, 'டாபிக' மாற்றினாள் சித்ரா.


இப்படியும் விசுவாசம்



''என்னக்கா... திடீர்ன்னு இப்டி சொல்றீங்க,''

''லிங்கேஸ்வரர் ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கிட்ட இருந்து பணத்தை வசூலிக்க, பட்டாக்கத்தியை வைச்சு மிரட்டினதா, பைனான்ஸ் கம்பெனி உரிமையாளரை, போன வாரம் 'அரெஸ்ட்' பண்ணாங்கள்ல,''

''ஆமாங்க்கா...''

''அவரை அரெஸ்ட் பண்ண போனப்ப, 'நா போலீசுக்கு 'இன்பார்மரா' இருக்கேன். என்னையவே அரெஸ்ட் பண்றீங்களா? எத்தன தடவ கவனிச்சிருக்கேன்...'ன்னு சொன்னாராம். ஆனா, அத கண்டுக்காம, அரெஸ்ட் பண்ணாங்க...''

''அவரோடு ஜீப்ல இருந்துதான், பட்டாக்கத்தியையும் பறிமுதல் பண்ணிட்டு, வண்டிய வழக்கில காட்டவே இல்லையாம். மாமூல் கொடுக்கறதுல அவர் 'தளபதி'யா இருக்கிறதால, விசுவாசம் காட்றாங்கன்னு, ஸ்டேஷன்ல இருக்கற மத்தவங்களே சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.

''இந்த மாமூல் கலாச்சாரம் ஒழியவே ஒழியாது போல,'' என, புலம்பிய மித்ரா, ''மூலனுார் போலீஸ் குட்டி ஆபீசர், ஒருத்தர், லீவு எடுத்துட்டு, தன் சொந்த ஊர்ல நடக்கிற சேவக்கட்டுக்கு போய்ட்டு வருவாராம்,''

''சேவக்கட்டு ஒரு சூதாட்டம், தடை செய்யப்பட்ட அதில் ஈடுபடறவங்களை கண்டுபிடிச்சு கைது செய்யற அதிகாரியே, அதுக்கு போனா எப்படின்னு, சமூக வலைத்தளங்களில் நெட்டிஷன்ஸ் வறுத்தெடுக்கறாங்க...'' என்றாள்.

''கோவிந்தா... கோவிந்தா,'' என, கன்னத்தில் கை வைத்த மித்ரா, ''உடுமலை சப்-டிவிஷன்ல நடக்கிற தப்பையெல்லாம் கண்டுபிடிச்சு, பெரிய ஆபீசர்கிட்ட சொல்ற 'ஸ்பெஷல் டீம்'ல இருக்கற ரெண்டு பேரு, அதிகார தோரணையில் வலம் வர்றாங்கன்னு போன வாரம் பேசினோம்ல. அதுல ஒருத்தர ஸ்டேஷன் ட்யூட்டிக்கு 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்களாம்', என்றாள்.


நாட்டுக்கோழி ஸ்பெஷல்



''இப்பெல்லாம், ஸ்டேஷன் விட்டு, ஸ்டேஷன் போனாலே, தடபுடலா விருந்து வைக்கிறாங்க,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.

''ஏங்க்கா, வெளி மாவட்டத்துக்கு போனா விருந்து வைக்கலாம். இதென்னா புதுக்கதையால்ல இருக்கு...'' சிரித்தாள் மித்ரா.

''உண்மைதான்டி. திருமுருகநாதசுவாமி குடி கொண்டுள்ள ஸ்டேஷன்ல வேலை பார்த்த ஒரு குட்டி ஆபீசரை வடக்கு பக்கம் மாத்திட்டாங்க. இதனால, பழைய ஸ்டேஷனில் அவரு கூட வேலை பார்த்தவங்களுக்கு, வஞ்சிபாளையத்துக்கு பக்கத்துல நாட்டுக்கோழி அடிச்சு, அசைவ விருந்து வச்சு அசத்தினாராம்...''

''அடடே...'' என, ஆச்சரியப்பட்ட மித்ரா, ''கே.வி.ஆர்., நகர் போலீஸ் ஸ்டேஷன்ல வேலை பார்த்த அந்த 'ஜெய'மான ஆபீசர், செல்வாக்கை பயன்படுத்தி அதே ஸ்டேஷன்ல 'டேரா' போட்டிருந்தார். அவரை இப்போ 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க,'' என, இன்னொரு போலீஸ் மேட்டரை சொன்னாள்.

''குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி, காலம் தள்ளத்தான் பல பேர் விரும்பறாங்க. எப்படியோ, லஞ்சம் வாங்காம, நேர்மையா வேலை பார்த்தாங்கன்னா சரிதான்,'' என்றாள் சித்ரா.

''அக்கா, லஞ்சம்னு சொல்றப்ப தான், ஒரு விஷயம் ஞாபகம் வருதுங்க்கா. பல்லடத்தில, போன வாரம் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய, துணை தாசில்தாரை 'அரெஸ்ட்' பண்ணாங்க. அதுக்கப்புறமா, லஞ்சம் வாங்குறதுல கில்லாடியா இருக்கற சில ரெவின்யூ ஆபீசர்ங்க கூட, உஷாராகிட்டாங்களாம்...''


மறந்துட்டாங்களே...



''ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல மட்டும் இல்லடி. அங்க இருக்கற பத்திரப்பதிவு ஆபீசிலும் லஞ்சம், பஞ்சமில்லா கொஞ்சி விளையாடுதாம். போன வாரம், அவிநாசியில, மினிஸ்டர் 'விசிட்' செஞ்ச மாதிரி, பல்லடத்துக்கும் வந்திருக்கலாம்னு, பொதுமக்கள் ஆதங்கப்படறாங்க. பல இடத்தை விட, பல்லடத்தில, லஞ்சம் பத்து மடங்காம்...''

''அட கொடுமையே...'' என்ற மித்ரா, ''அவிநாசிக்கு வந்த மினிஸ்டர்கிட்ட, அன்னுார் பதிவு ஆபீஸ்ல, அளவுக்கதிமாக அனுமதியில்லாத இடத்துக்கும் அங்கீகாரம் தர்றாங்க; அதுக்கு 'ஸ்டாம்ப் வெண்டர்'கள் தான், புரோக்கர் மாதிரி செயல்பட்டு, பெரிய தொகையை, கமிஷனா வாங்கி, ஆபீசர்களுக்கு தர்றாங்கன்னு, மினிஸ்டர்கிட்ட நேரடியா சொன்னாருல்ல. இதனால, அந்த ஊர்ல இருக்கற ஆபீசர்கள், கிலியடிச்ச மாதிரி தான் இருக்காங்களாம்,'', என, ரிஜிஸ்டர் அலுவலகம் பற்றிய கூடுதல் தகவலை சொன்னாள்.

''ஊசி இடம் கொடுத்தா தான், நுால் உள்ளே நுழையும்னு சொல்ற மாதிரி, மக்களும், லஞ்சம் கொடுக்காம இருக்கணும். அப்படி லஞ்சம் கேட்டா, தைரியமா புகார் சொல்லணும்...'' என்றாள் சித்ரா.

''நீங்க சொல்றது, நுாத்துக்கு நுாறு உண்மைங்க்கா... தாலுகா, ஆர்.டி.ஓ., ரிஜிஸ்டர் ஆபீஸ் மட்டுமல்ல, ஜி.ஹெச்சிலும், லஞ்சம் தாண்டவமாடுதுங்க்கா...''

''அங்கேயுமா?''

''ஆமாங்க்கா... பிறப்பு, இறப்புக்கு, மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடலில், சர்டிபிகேட் கொடுக்கறாங்க. ஆனால், கவனக்குறைவாக பெயரில் தவறு செய்து விடுகின்றனர். கார்ப்ரேஷன் ஆபீசுக்கு அத கொண்டு போனால், 'பேர் தப்பா இருக்குதுங்க... போய் மாத்திட்டு வாங்க'னு திருப்பி அனுப்புறாங்களாம்,''

''மறுபடியும் அங்க போனா, அங்கிருக்கற 'கிளார்க்' 500, ஆயிரம்னு கிடைக்கற வரை கறந்துட்டு தான், எழுதி கொடுக்கிறாராம். அவங்க செய்யற தப்புக்கு, நாங்க 'தண்டம்' கட்டோணுமா'னு, மக்கள் புலம்பறாங்க...''

''ஆமான்டி, பொறந்ததிலிருந்து போற வரைக்கும் லஞ்சப்பேய் தாண்டவமாடுது. இத யாரும் ஒழிக்க மாட்டேங்கறாங்களே...'' என, ஆதங்கப்பட்ட சித்ரா, மித்ராவை அவள் வீட்டில் இறக்கி விட்டு, புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X