பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு திட்ட அறிவிப்பு: காத்திருக்கும் விவசாயிகள்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
அவிநாசி:காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரிடரால், விவசாயிகள் இழப்பை எதிர்கொள்ளாமல் இருக்க, சோளம், நிலக்கடலை மற்றும் பயறுவகை, தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி, வாழை உள்ளிட்ட சில பயிர்களுக்கு, மத்திய அரசு பயிர் காப்பீடு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.பயிர்க்காப்பீடு தொகையில், விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம், அதிகபட்சம், 5 சதவீதம் மட்டுமே. மீத தொகையில், 90

அவிநாசி:காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரிடரால், விவசாயிகள் இழப்பை எதிர்கொள்ளாமல் இருக்க, சோளம், நிலக்கடலை மற்றும் பயறுவகை, தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி, வாழை உள்ளிட்ட சில பயிர்களுக்கு, மத்திய அரசு பயிர் காப்பீடு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.பயிர்க்காப்பீடு தொகையில், விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம், அதிகபட்சம், 5 சதவீதம் மட்டுமே. மீத தொகையில், 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகை மத்திய அரசின் பங்களிப்பாகவும், எஞ்சிய தொகை மாநில அரசின் பங்களிப்பாக இருந்து வருகிறது. ஆரம்ப கட்டத்தில், இத்திட்டத்தில் இணைய விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த நிலையில், பயனாளிகளுக்கு காப்பீடு திட்டத்தின் பலன் கிடைக்க துவங்கியது. இதனால், கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக, திட்டத்தில் இணைய அதிகளவில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும், ஜூன் கடைசி அல்லது ஜூலை துவக்கத்தில், பயிர் காப்பீடு குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால், இதுவரை அதுகுறித்த அறிவிப்பு வெளியாகாததால், விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X