சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சருக்கு எதிரான டெண்டர் புகார் விசாரணை நடத்த உள்ளதாக ஐகோர்ட்டில் தகவல்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சென்னை : மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில், முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகாரில், மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையை தொடர்ந்து, விசாரணை நடத்த உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில், டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணிக்கு தொடர்பு

சென்னை : மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில், முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகாரில், மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையை தொடர்ந்து, விசாரணை நடத்த உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில், டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணிக்கு தொடர்பு இருப்பதாகவும் புகார்கள் கூறப்பட்டன.இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரி, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.

அறப்போர் இயக்கம் சார்பில், வழக்கறிஞர் சுரேஷ் ஆஜரானார்.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடு நடந்ததாக உள்ள குற்றச்சாட்டுகளும், மத்திய கணக்கு தணிக்கை துறையின் அறிக்கையும் ஒன்றாக உள்ளது. ''முன்பு, வழக்கு பதிவு செய்யாமல், விசாரணை நடத்தப்பட்டது. தற்போது, கணக்கு தணிக்கை அறிக்கை வந்துள்ளது. அதில், உள்ள சில தகவல்கள் குறித்து விசாரிக்க வேண்டியதுள்ளது. தேவையானால், வழக்குப் பதிவு செய்யப்படும்,'' என்றார்.முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில், வழக்கறிஞர் வி.இளங்கோவன் ஆஜராகி, ''ஏற்கனவே, ஆரம்பகட்ட விசாரணை முடிந்து, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அரசு தரப்பிலும், மனு தாக்கல் செய்யப்பட்டது. ''தற்போது, கணக்கு தணிக்கை அறிக்கை வந்துள்ளது. விரிவான பதில் மனு, கூடுதல் ஆவணங்கள் தாக்கலுக்கு அவகாசம் வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, விசாரணையை அக்டோபருக்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X