அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீதியில், விளம்பரம் செய்யும் கட்சியினர்!

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்பூர்:உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பால், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தில் அரசியல் கட்சி உள்ளூர் நிர்வாகிகள் பலரும் களம் இறங்கி பணியாற்றத் துவங்கியுள்ளனர்.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைத்துள்ள நிலையில், அதே வேகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையும் நடத்தினால், எளிதில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தில் அதற்கான
 வீதியில், விளம்பரம் செய்யும் கட்சியினர்!

திருப்பூர்:உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பால், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தில் அரசியல் கட்சி உள்ளூர் நிர்வாகிகள் பலரும் களம் இறங்கி பணியாற்றத் துவங்கியுள்ளனர்.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைத்துள்ள நிலையில், அதே வேகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையும் நடத்தினால், எளிதில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தில் அதற்கான முன்னெடுப்புக்களை துவங்கியுள்ளது.அதே சமயம் தங்கள் வார்டுகளில் கவுன்சிலர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் உள்ள கட்சியினர் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகள் மீது கவனம் செலுத்தி தங்களை மக்கள் மத்தியில் அறிமுகமும், பிரபலமும் செய்து கொள்ளும் முயற்சியில் உள்ளனர்.தினமும் காலை,மாலை என தங்கள் பகுதியில் சுற்றி வருகின்றனர். குடிநீர் சப்ளை, சாக்கடை அடைப்பு, தெரு விளக்கு, குப்பை அள்ளுதல் என அடிப்படை பணிகள் குறித்து தகவல் பெற்று, தங்கள் பகுதி உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கைக்கு முயற்சிக்கின்றனர்.இது போன்ற பிரச்னை குறித்து மக்களிடம் மனுக்கள் பெறுதல், ஆர்ப்பாட்டம், போராட்டம் என கூட்டம் திரட்டுவது போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகிறது.முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் கவுன்சிலர் கனவில் உள்ளவர்கள் தங்கள் பகுதியில் பொதுமக்கள் பார்வையிடும் படும் வகையில் பேனர்கள் வைத்தல், தங்கள் பகுதி நபர்களை இணைத்து வாட்ஸ் ஆப் குழு அமைத்து பொதுப்பிரச்னை குறித்த தகவல் பெறுவதும், தீர்வு கண்ட பிரச்னைகள் குறித்து அதில் பதிவிடுவது என சுழன்று பணியாற்றுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X