அரசியல் செய்தி

தமிழ்நாடு

நினைத்தது கிடைத்த மகிழ்ச்சி! கேட்டது கிடைத்த திருப்தியில் மாணவர்கள்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்பூர்:தமிழகம் முழுவதும், 2020-21 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 முடிவு நேற்று வெளியானநிலையில், திருப்பூர் மாவட்டத்தில், 26 ஆயிரத்து, 135 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.கொரோனா காரணமாக பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். இருப்பினும் மேல்படிப்புக்கு மதிப்பெண் கட்டாயம் என்பதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1ல் பெற்ற மதிப்பெண்
 நினைத்தது கிடைத்த மகிழ்ச்சி! கேட்டது கிடைத்த திருப்தியில் மாணவர்கள்

திருப்பூர்:தமிழகம் முழுவதும், 2020-21 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 முடிவு நேற்று வெளியானநிலையில், திருப்பூர் மாவட்டத்தில், 26 ஆயிரத்து, 135 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.கொரோனா காரணமாக பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். இருப்பினும் மேல்படிப்புக்கு மதிப்பெண் கட்டாயம் என்பதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் நேற்று வெளியானது.திருப்பூர் மாவட்டத்தில், 214 பள்ளிகளில் படிக்கும், 11 ஆயிரத்து, 928 மாணவர், 14 ஆயிரத்து, 207 மாணவியரின் முடிவுகளும் நேற்று வெளியிடப்பட்டது.மதிப்பீடு முறை குறித்து ஏற்கனவே அரசு வெளியிட்டிருந்ததால், மாணவர்கள் அவர்களாகவே மதிப்பெண்களை கணித்திருந்தனர். எனவே, முடிவையும் மொபைல்போன் மூலமாக எளிதாக அறிந்துகொண்டனர்.பள்ளிக்கு நேரடியாக வந்து, நண்பர்களுடன் பகிரந்து கொள்ள பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நாளுக்கே உண்டான எந்த வித ஆராவாரமும் இல்லாது, அனைத்து பள்ளிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில், ''மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண்களில், 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறை தேர்வில் பெற்ற, 30 சதவீதம் என்ற, விகிதத்தில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டது.முதல்முறையாக மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் தசம எண்களாகவே (உதாரணம்: 581.55) குறிப்பிடப்பட்டுள்ளன. வரும் 22ம் தேதி வரை மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,'' என்றார்.மதிப்பெண்களில் மாணவர்கள் திருப்தியடையவில்லை எனில், மீண்டும் செப்., அக்., மாதத்தில் தேர்வெழுதிக் கொள்ள லாம் என கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து மாணவர்களின் கருத்தை கேட்போம்:திருப்தியளிக்கிறதுநாகஜோதி:

தேர்வு எழுதாமலே, 600க்கு, 488 மதிப்பெண் எடுத்துள்ளேன். கடந்த பொதுத்தேர்வுகளில்நான் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வழங்கியதால் திருப்தியாகவே உள்ளது. பி.காம்., சேர உள்ளேன்.பார்த்திபன்:

பிளஸ் 2 முடிவில், 571 மதிப்பெண் எடுத்துள்ளேன். தேர்வு வைத்திருந்தால் இவ்வளவு மதிப்பெண் எடுத்திருப்பேனா என்பது தெரியாது. நீட் தேர்வு எழுத உள்ளேன். திரும்ப தேர்வு எழுத தயாராக இல்லை.தேர்வு எழுதியிருக்கலாம்...ஜோதிகா:

நான், 527 மதிப்பெண் வாங்கியுள்ளேன். லாக்டவுனிலும் கல்வி சேனல் வழியே படித்துக்கொண்டு இருந்தேன். தேர்வு எழுதியிருந்தால்கூடுதல் மதிப்பெண் எடுத்திருக்க வாய்ப்புண்டு.மிருதுபாஷினி:

திருப்தியில்லை என்று சொல்ல முடியாது. இருந் தாலும், தேர்வு எழுதி யிருந்தால், கூடுதலாக, 20 மதிப்பெண் பெற்றிருப்பேன். இப்போது, 568 மதிப்பெண் எடுத் துள்ளேன். அடுத்து பி.எஸ்சி., புள்ளியியல் படிக்க உள்ளேன்.யாரும் தயாராக இல்லை!

திருப்பூர் ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், பிளஸ் 2 மதிப்பெண் மதிப்பீடு குழு உறுப்பினரான ஸ்டெல்லா:மதிப்பீடு குழுவில் உள்ள அனைத்து தரப்பு உறுப்பினர்களின் ஆலோசனைகளும் ஏற்கப்பட்டு இறுதியாக இந்த மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது. எங்கள் பள் ளியின் அதிகபட்ச மதிப்பெண், 581.95 ஆகும்.மேலும், 99.9 சதவீத மாணவியர் மதிப்பெண்களால் திருப்தியாகவே உள்ளனர். மீண்டும் தேர்வு எழுத யாரும் தயாராக இல்லை. திருப்தி இல்லாதவர்களுக்கு அரசு வாய்ப்பு அளிக்கிறது. பயன்படுத்திக்கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X